Cook with comali pugazh Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ வலம் வருகிறது. இதில் கலந்து கொண்ட அனைவருக்குமே இந்த நிகழ்ச்சி ஒரு புதிய திருப்பு முனையாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது. அதிலும் இந்த நிகழ்சியில் கலந்து கொண்டோர் முதல் ரசித்தோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து காமெடி விருந்து கொடுத்த புகழ், தனது வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
Advertisment
தற்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தும் வரும் புகழ், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'காமெடி ராஜா கலக்கல் ராணி' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார். காமெடிக்கு பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இதில் போட்டியாளர்களாக வரும் ஒவ்வொரு ஜோடியுமே வித்தியாசமான கான்சப்டில் வந்து அசத்துகின்றனர்.
Advertisment
Advertisements
இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் இருந்து புகழ் விலகியுள்ள புகழ் அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தை கடந்த வார எபிசோடில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார் புகழ். முன்னதாக பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் " புகழ் இனி 'காமெடி ராஜா கலக்கல் ராணி' ஷோ-வில் கலந்து கொள்ள மாட்டார். அவர் திரையுலகில் பிஸியாகிவிட்டார்" என்று தெரிவித்தார்கள். அதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே கை தட்டி பாராட்டு தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து புகழ் பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் புகழ், "அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? கண்டிப்பாக அனைவரும் நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய ஆதரவினால் நான் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். ஆகையால் என்னால் 'காமெடி ராஜா கலக்கல் ராணி' நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக சீக்கிரமாக வந்து கலந்து கொள்வேன். ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன். கண்டிப்பாக 'வலிமை'யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்" என்று கூறியிருந்தார்.