Cook With Comali Season 3 Tamil News: விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் ‘குக் வித் கோமாளி’ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளை குறிப்பிடலாம். கொடுக்கப்படும் டாஸ்க்குகளின் போது அவர்கள் செய்யும் சேட்டைகளும் காமெடிகளும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தாமல் இருந்தது.
அதிலும் கடந்தாண்டு ஒளிபரப்பாகிய சீசன் 2 முதல் சீசனை விட நன்றாகவே இருந்தது. தவிர, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டிஆர்பி-யையே ‘ஓவர் டேக்’ செய்திருந்தது.

குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்து சில மாதங்கள் கடந்த நிலையில் அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாக உள்ளது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. மேலும் சீசன் 3 குறித்து ஏதேனும் தகவலாவது வெளிவருமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3 குறித்த ட்ரைலர் வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது.
இந்த நிலையில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகும் தேதி மற்றும் போட்டியாளர்கள் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நிகழ்ச்சி வரும் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளராக பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளனர்.

அதில், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வாழ்ந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனும் ஒருவர். ரோஷினி, ‘பிடிச்சவங்களுக்கு சமைத்து கொடுக்க ரொம்ப பிடிக்கும்’ என்று ப்ரோமோவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இந்த வார கோமாளியாக குரேஷி வந்துள்ளார்.

யூடியூப்பில் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“