scorecardresearch

நிர்வாண சேலஞ்ச்: விஜய் டி.வி பிரபலம் போட்டோவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக சரத் விஷ்ணு விஷால் போல் போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நிர்வாண சேலஞ்ச்: விஜய் டி.வி பிரபலம் போட்டோவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஒருவர் பெட் ரூமில் நிவாண போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டிருந்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த புகைப்படத்திற்கு ஒரு சாரார் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தாலும், பெரும்பாலும் பல விமர்சனங்களை சந்தித்த நிலையில், ரன்வீர் சிங் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சமீப நாட்களாக பெரும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த பரபரபப்பு அடங்குவதற்குள், தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தனது அடுத்த படமான மோகன்தாஸ் படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் நோக்கில், தனது பெட்ரூமில் இருந்தபடி நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ரன்வீர் சிங் போல விஷ்ணு விஷாலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது இவர்களுக்கு போட்டியாக சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக சரத் விஷ்ணு விஷால் போல் போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சீக்கிரம் எழுந்திருங்க இல்லனா கேஸ் போட்ருவாங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali sarath posted nude photo on instagram viral