அவரு ரொம்ப பிஸி... விஜய் டிவி தோஸ்த்களை இப்படி ஏமாற்றலாமா புகழ்?
Tamil Reality Show : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 கொண்டாட்டம் குறித்து வெளியான ப்ரமோவில் புகழ் இல்லாதது குறித்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
Tamil Reality Show : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 கொண்டாட்டம் குறித்து வெளியான ப்ரமோவில் புகழ் இல்லாதது குறித்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
Cook With Comali Season 2 Kondattam : விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஷோவின் முதல் சீசனை விட கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி தமிழ் புத்தாண்டு அன்று நிறைவு பெற்ற சீசன் 2-க்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகள். இந்த நிகழ்ச்சி முடிந்த நாட்கள் பல கடந்தாலும், சமூக வலைதளங்களில் நாள்தோறும் இந்நிகழ்ச்சி குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Advertisment
இந்த ஷோவில் கோமாளிகளின் ஜோடி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். புகழ் - பவித்ரா, புகழ் - தர்ஷா, அஷ்வின் - சிவாங்கி, பாபா பாஸ்கர் - புகழ் , பாலா மற்றும் ரித்திகா ஆகிய ஜோடிகள் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் ஜோடிகளாக வலம் வந்தது. இந்த ஷோவுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பயன்டுத்திக்கொள்ளும் வகையில் விஜய் டிவி தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியை தயார் செய்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ப்ரமோகளில், குக் வித் கோமாளியின் நாயகன் என்று வர்ணிக்கப்படும் புகழ் இல்லாததுதான் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடம் உரையாடிய சக்தியிடம் புகழ் பற்றி கேட்டபோது, அவர் (புகழ்) வரவிருக்கும் பல படங்களில் கையெழுத்திட்டுள்ளதால், அவர் படப்பிடிப்புப் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார், அதனால் தான் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபுறம் புகழ் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil