ஆரம்பத்தில் ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சியில் என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்று அலட்சியமாக கேள்வி கேட்டவர்களுக்கு அதன் மிகப்பெரிய வெற்றி பலரையும் வியக்கவைத்தது. அந்த நிகழ்ச்சிதான், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்சிதான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைவிட குக்கு வித் கோமாளி 2வது சீசனுக்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், மூத்த சமையல் கலைஞர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பாட் நெறிப்படுத்தி சமையல் டாஸ்க்குகளை அளித்தனர். புகஷ், சிவாங்கி, பாலா, தங்கதுரை, உள்ளிட்டோர் கோமாளிகளாக பங்கேற்றனர். பவித்ரா, தர்ஷா குப்தா, அஸ்வின், ஷகிலா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ரக்ஷன் தொகுத்து வழங்கினார்.
குக்கு வித் கோமாளி சீசன் 2வில் கோமாளிகள், புகழ், ஷிவாங்கி, பாலா மற்றும் பவித்ரா, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் செய்த நகைச்சுவை கலாட்டாவுக்கு அளவே இல்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு, புகழ், சிவாங்கி, அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா எல்லோருமே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார்கள். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலங்களான புகழ், சிவாங்கி, பவித்ரா, தர்ஷா, அஸ்வின் எல்லோருக்கும் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்து பிஸியாக இருக்கிறார்கள். அதிலும் அஸ்வினை, ஒரே தயாரிப்பு நிறுவனம் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மெகா காமெடி ஸ்டார் புகழ், பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். புகழ் நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளதாக தெரிவித்தார்.
புகழ், சிவாங்கி, பாலா, பவித்ரா, தர்ஷா, அஸ்வின் இவர்கள் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டுமல்ல நிகழ்ச்சிக்கு வெளியேயும் ஒன்றாக சேர்ந்தால், நகைச்சுவைக்கும் பொழுதுபோக்குக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு ஒரு காமெடி கலாட்டா செய்வார்கள்.
இதனிடையே, விரைவில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்குள்ளாக குக்கு வித் கோமாள் சீசன் 2 போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.
ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்சியின் அனைத்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மீண்டும் வந்து பங்கேற்றுள்ள குக்கு வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, பாலா, பவித்ரா, தர்ஷா குப்தா, அஸ்வின் ஆகியோர் மீண்டும் ஒன்று கூடியுளதால் காமெடி கலாட்டாவுக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
குக்கு வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அஸ்வின், புகழ், பவித்ரா எல்லோரும் ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். இந்த புரோமோவைப் பார்த்த ரசிகர்கள், புகழ், சிவாங்கி, பவித்ரா, தர்ஷா, அஸ்வின் எல்லோரும் மறுபடியும் ஒண்னு கூடிட்டாங்கய்யா… என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதில், சிவாங்கி அஷ்வினை அழகாக கலாய்த்து இருக்கிறார். இந்த புரொமோ ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.