Cook with Comali Season 2 Winner Kani, Shakeela, Ashwin Tamil News : குக் வித் கோமாளி சீசன் 2 வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடையப்போகிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றியாளர்கள் என்கிற எதிர்பார்ப்பைவிட, இனி புகழ், ஷிவாங்கி, அஸ்வின் உள்ளிட்ட தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை இனி வார வாரம் பார்க்க முடியாதே என்கிற ஃபீலிங்கில்தான் பலர் உள்ளனர்.

இந்த நகைச்சுவையான சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளர்களைவிட, நடுவர்களுக்குத்தான் அதிக ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். வேறு எந்த நிகழ்ச்சியிலும் இந்த அளவிற்கு நகைச்சுவை கன்டென்ட் கொடுக்கும் நடுவர்கள் இல்லை. கோமாளிகளையே மிரள வைக்கிற அளவிற்கு செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர்களின் பங்களிப்பு இருந்தது. இதுவே நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கியது.

கோமாளிகளோடு இணைந்து போட்டியாளர்களும் சரிக்கு சமமாக கன்டென்ட் கொடுத்தனர். இவர்களைவிடப் பெரிய கன்டென்ட் கிரியேட்டர், எடிட்டிங்தான். ஒவ்வொருவருடைய ரியாக்ஷனையும் அலேக்காக கேப்ச்சர் செய்து அதற்கேற்ற பின்னணி இசை மற்றும் டயலாக் போட்டு, அதனை வேறு லெவலுக்குக் கொண்டு செல்லும் மந்திரம் எடிட்டர் கையில்தான் உள்ளது.

இப்படி வித்தியாச படைப்பின் இறுதி எபிசோட் தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த பிரமாண்டமான இறுதிப் போட்டியில் சிம்பு உட்படப் பல விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த கிராண்ட் ஃபைனல் ஐந்து மணி நேரம் நீடிக்கும் மிக நீண்ட எபிசோடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்களின்படி, ‘குக் வித் கோமாளி 2’-ன் டைட்டில் வின்னர் கனி என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மக்களின் மனதிற்கு நெருக்கமான போட்டியாளராக இல்லாவிட்டாலும் இந்த சீஸனின் டைட்டில் வின்னருக்கான தகுதி பெறுகிறார்.
இரண்டாம் இடத்தில் மக்களின் ஃபேவரைட் போட்டியாளரான ஷகீலா இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே போட்டியிலிருந்து எலிமினேட் ஆகி வைல்டு கார்டு சுற்று வழியாக இறுதிப் போட்டிக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்தவர் ஷகீலா என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் சீஸனின் இதயத்துடிப்பான அஸ்வின் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். நடிப்பில் மட்டுமல்ல சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் அஸ்வின், இளம் பெண்களின் ஃபேவரைட் போட்டியாளர். அதுமட்டுமின்றி, இளம் ஆண்களுக்கும் அஸ்வின் ஒரு உத்வேகம் என்றும் சொல்லலாம்.

நான்காம் இடத்தில் பாபா பாஸ்கரும் ஐந்தாம் இடத்தில் பவித்ரா லக்ஷ்மியும் உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வார இறுதி நாள்களையும் சிரிப்போடு நிறைவு செய்ய வைத்த கோமாளிகளை நிச்சயம் மக்கள் மிஸ் செய்வார்கள். இந்நிகழ்ச்சியின் உண்மையான வெற்றியாளர்கள் கோமாளிகள்தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil