/tamil-ie/media/media_files/uploads/2021/06/Shivangi-2.jpg)
சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடி புகழ் பெற்றவர் சிவாங்கி. தொடர்ந்து விஜய் டிவியின் ஹிட்ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட இவர் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பாடல் மட்டுமல்ல காமெடியும் என்னால் செய்ய முடியும் என்று சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலம் நிரூபித்து காட்டினார்.
இந்த நிகழச்சியை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது நடித்து வரும் 'டான்' படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. இந்நிலையில் சமூகலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்த பிறகு தினமும் அது தொடாபாக புகைப்படங்களை பதிவிட்டு நினைவுகளை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் சிவாங்கி ட்விட்டர் கணக்கிற்கு வெரிபிகேஷன் செய்யப்பட்ட ப்ளூ டிக் கிடைத்துவிட்ட நிலையில், இதனை கொண்டாடும் விதமாக இன்று ரசிகர்களுடுன் உரையாடிய அவர், ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது சிவாங்கியிடம் ஒரு ரசிகர்கள் உங்களை எப்போது ஹீரோயினாக பார்க்கலாம்?' என கேட்டுள்ளார்.
Never picturised me as a heroine. But if I get a perfect script..definitely open for it..#kadavulsettinghttps://t.co/l1i6egW5QD
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 17, 2021
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஷிவாங்கி, "நான் என்னை ஹீரோயினாக யோசித்து பார்த்தது இல்லை. ஆனால் ஒரு என்க்கு ஏற்றதுபோல ஒரு ஸ்கிரிப்ட் என்னை தேடி வந்தால் நான் கண்டிப்பாக நடிக்க தயாராக இருக்கிறேன். இது கடவுள் செட்டிங்" என என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.