குக் வித் கோமாளி: ‘கன்ஃப்யூஷன்’ ரூமில் கதறும் ஷிவாங்கி, பாலா

பிக் பாஸில் ‘கன்ஃபெஷன் ரூம்’ போல, இதில் ‘கன்ஃப்யூஷன் ரூம்’ என்ற அறை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

By: February 15, 2020, 1:04:22 PM

Cook With Comali : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித கோமாளி நிகழ்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது, அவர்கள் செய்யும் நகைச்சுவை தான். கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்கள் செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் நடுவர்களாக உள்ளனர்.

மதங்களை தாண்டியும் இதயங்களை வென்ற காதல்… இன்ஸ்பையர் செய்த இந்து – முஸ்லீம் திருமணங்கள்!

ரேகா, வனிதா விஜயக்குமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாக உள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரம்யா பாண்டியன் வெற்றி பெற்று இரண்டாவது பைனல் போட்டியாளராக முன்னேறியுள்ளார். மூன்றாவது போட்டியாளராக வனிதா வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே முதல் போட்டியாளராக உமா ரியாஸ்கான் ஃபைனலுக்கு சென்று விட்டார்.

’என்னை மன்னிச்சுடுங்க’ ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சிம்பு – காரணம் என்ன?

இந்நிலையில் இந்த வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பிக் பாஸில் ‘கன்ஃபெஷன் ரூம்’ போல, இதில் ‘கன்ஃப்யூஷன் ரூம்’ என்ற அறை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் சமையல் செய்வதற்கான பொருட்களை வேகமாக ஒரு குரல் சொல்கிறது. குரலின் வேகத்திற்கு ஏற்றபடி சரியாக எழுத முடியாத ஷிவாங்கியும், பாலாவும் திணறுகிறார்கள். இதைப் பார்க்கும் அனைவருக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Cook with comali shivangi bala vijay tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X