scorecardresearch

பாட்டு மட்டும் இல்ல… டான்ஸூம் நமக்கு அத்துபடி… சிவாங்கியின் வைரல் நடனம்

Tamil Serial Update : குக் வித் கோமாளி சீசன் 3-ல் தற்போது கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பவர்.

Cook With Comali Shivangi Dance : தற்போதைய காலகட்டத்தில், பெரிய திரையில் சாதிப்பதற்கு சின்னத்திரை பெரிய துணையாக உள்ளது என்று சொல்லாம். நடிகர் நடிகைகள் பலரும் பெரிய திரையில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரைக்கு வந்த காலம் மாறி தற்போது பலரும் சின்னத்திரையில் அறிமுகமாகி பெரியத்திரையில் நிலையான இடத்தை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பெரியத்திரையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளவர் நடிகை சிவாங்கி. சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக இவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு குவிந்து வருகிறது.

தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சிவாங்கி, தொடர்ந்து ஒரு சில படங்ககளை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சின்னத்திரையிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 3-ல் தற்போது கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பவர்.

அவ்வப்போது இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சிவாங்கி தனது தோழியுடன் மயக்குறியே சிரிக்கிறியே என அனிருத் இசையில் வெளியான பாடலுக்கு அசத்தலாக நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாங்கி பாடல் மட்டுமல்ல நடனத்திலும் அசத்துகிறார் என்று கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali shivangi dace with friend aniruth song update in tamil