scorecardresearch

இந்த எக்ஸ்பிரஸ் அழகு எங்க போகுது? ரசிகர்களிடம் சிக்கிய சிவாங்கி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய சிவாங்கி அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பாடி ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் குஷிப்படுத்தி வருகிறார்.

இந்த எக்ஸ்பிரஸ் அழகு எங்க போகுது? ரசிகர்களிடம் சிக்கிய சிவாங்கி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருபவர் சிவாங்கி. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.   

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர் இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

அதிலும் 2-வது சீசனில் அஸ்வின் சிவாங்கி காம்போ, மற்றும் புகழ் சிவாங்கி காம்போ பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த காம்கோவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம உள்ள நிலையில், இவர்களுக்கு படவாய்ப்பும் குவிந்து வருகிறது. அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய சிவாங்கி அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பாடி ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் குஷிப்படுத்தி வருகிறார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரந்தோறும் ஒரு புதிய கெட்டப்பில் தோன்றும் சிவாங்கி தனது கெட்டப் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சிவாங்கி தற்போது தெறி படத்தின் சமந்தாவின் கெட்டப்பில் சேலை அணிந்துள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தெறி பேபி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிவாங்கி கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு துல்கர் சல்மான் வந்தபோது ஓகே கண்மணி படத்தில் வரும் நித்யா மேனன் கெட்டப்பில் இருந்தார். அந்த கெட்டப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலாக பரவிய நிலையில் இதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali shivangi theri samantha getup troll update