Advertisment

பாலாவை கலாய்த்த சீரியல் நடிகை வெளியேற்றமா? குக் வித் கோமாளி ஷாக்

Cook With Comali Show Elimination Round : இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் நடிகை ரித்திகா வெளியேற்றப்பட்டது தெரிய வந்தது.

author-image
WebDesk
Feb 21, 2021 18:50 IST
New Update
vijay tv, cook with comali, bakyalakshmi serial, actress rithika, விஜய் டிவி, குக் வித் கோமாளி, பாக்யலட்சுமி சீரியல், ரித்திகா, kpy, bala, comedian bala

குக் வித் கோமாளி ஷோவில், இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் நடிகை ரித்திகா வெளியேற்றப்பட்டது தெரிய வந்தது.

Advertisment

சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த நடிகை ரித்திகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருப்பது பலரையும் அதிர்சிக்குள்ளாக்கியது. ரித்திகாவுக்கு கோமாளியாக பாலா இருந்தார்.

 

 

கலக்கப்போவது யாரு புகழ் பாலாவையே  மடக்கும் அளவுக்கு பாக்கிலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா  கவுண்ட்டர் கொடுத்து கெத்து காட்டி தெறிக்கவிட்டிருந்தார்.

 

வீடியோவில், பாலா முதல்வன் பட ரகுவரன் கெட்டப்பில் வந்து பாக்கிலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவிடம் இது டூ லேட் என்று சொல்ல அதற்கு அவர் இது ஆம்ப்லேட் என்று சொல்கிறார். அதோடு, பாலா ஓரளவுக்கு மட்டும்தான் நான் பொறுமையா இருப்பேன். அதற்கு அப்புறம் ஸ்டவ்வுக்கு அடியில பாம்ப் வச்சுடுவேன்… என்று சொல்ல, ஸ்டவ்வுக்கு அடியில கேண்டில்தான் வச்சிருக்கேன் வைங்க என்று மீண்டும் ஒரு கவுண்ட்டர் போடுகிறார். நோஸ்கட்டான பாலா நான் வேலைய விட்டு போறேன்” என்று சொல்லி ஓடுகிறார்.
கவுண்ட்டர் போட்டு கட்டையைக் கொடுக்கும் பாலாவையே மிரளவிட்டு கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் பெர்பார்மன்ஸ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment