என் கல்யாணம் எப்போ தெரியுமா? அடித்துச் சொல்லும் ஷிவாங்கி

Cook with comali sivaangi talks about her marriage plans: திருமணம் எப்போது என கேட்ட ரசிகர்; குக் வித் கோமாளி சிவாங்கியில் அசத்தல் பதில்

Cook with comali sivaangi talks about her marriage plans: திருமணம் எப்போது என கேட்ட ரசிகர்; குக் வித் கோமாளி சிவாங்கியில் அசத்தல் பதில்

author-image
WebDesk
New Update
என் கல்யாணம் எப்போ தெரியுமா? அடித்துச் சொல்லும் ஷிவாங்கி

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி தனக்கு எப்போது திருமணம் என்பதை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

Advertisment

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் அவரது வெகுளியான பேச்சு எல்லோரையும் ரசிக்க வைத்தது. இது அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகும் வாய்ப்பைப் பெற்று தந்தது. பின்னர் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் சிவாங்கி கலந்துக் கொண்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ், பாலா, சிவாங்கி, அஸ்வின், பவித்ரா உள்ளிட்ட நிறைய பேருக்கு புகழ் வெளிச்சத்தை தந்தது. அந்த வகையில் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்திலும் சிவாங்கி நடித்து வருகிறார்.

publive-image

Advertisment
Advertisements

சிவாங்கி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றுவதோடு, யூடியூபிலும் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் சிவாங்கியிடம் எப்போது திருமணம் செய்து கொள்ள உள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு சிவாங்கி இன்னும் 8 வருடங்கள் கழித்து திருமணம் செய்வேன் என்று பதில் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Shivangi Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: