Cook with comali fame Sivaangi’s fan registers complaint Tamil News: ரசிகர் கூறிய புகார் ஒன்றுக்கு ருசிகர பதில் கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி.
Cook with comali Sivaangi Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பாப்புலரான சிவாங்கி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தவராக வலம் வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பாடகியாக தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
Advertisment
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலோனோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில், சிவாங்கியும் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவரின் யூடூப் சேனலில் அவ்வப்போது தோன்றும் இவர், பாடல் பாடிய வீடியோக்களையும், கொண்டாட்ட வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளித்தும் வருகிறார்.
Advertisment
Advertisements
அந்த வகையில் சமீபத்தில் சிவாங்கி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த முறை சிவாங்கி ரசிகர் ஒருவரின் புகாருக்கு பதிலளித்துள்ளார். அந்த ரசிகரின் புகார் என்னவென்றால், "சிவாங்கி மேடம், ஒரு கம்ப்ளைன்ட் சொல்ல வந்தேன். செல்லமா செல்லமான்னு ஒரு பொண்ணு இருந்தா, அந்த பொண்ணு எனது ஹார்ட்க திருடி கொண்டு போயிட்ட, அவள கொஞ்சும் கண்டு புடிச்சி தாங்க ப்ளீஸ்" என்றுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சிவாங்கி 'ஓ தோ தேடி கூட்டிட்டு வரேன்' என்றுள்ளார்.
ரசிகர்களின் மேலும் சில கேள்விகளுக்கும் பதிலளித்துள்ள சிவாங்கி, தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'ஆர்டிகல் 15' தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.