'ஸ்மைல் மெஷின், கேடி ரவுடி, லவ் யூ தங்கமே..!' வேற லெவல் வாழ்த்துக்களில் திணறும் சிவாங்கி!
Cook with comali sivangi birthday wishes from ashwin and pugazh goes viral: சிவாங்கிக்கு இரண்டு முக்கிய ஸ்டார்களிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்து வந்துள்ளது. அதில் ஒருவர், குக் வித் கோமாளி மூலம் சிவாங்கிக்கு கிடைத்த அண்ணன் புகழ், மற்றொருவர் குக் வித் கோமாளியில் சிவாங்கியின் க்ரஷ் ஆன அஸ்வின்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை கவர்ந்த மிகப்பெரிய ஹிட்டான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இரண்டாவது சீசன் வெளிவந்து, கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் அடுத்த சீசனுக்காக ஏங்க தொடங்கிவிட்டார்கள்.
Advertisment
இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமே அதில் வரும் கோமாளிகள்தான். அதுவும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை மற்றும் சரத் போன்றோர் செய்யும் கலாட்டாக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஸ்டாரான சிவாங்கிக்கு இன்று (மே 25), பிறந்த நாள். சிவாங்கிக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவாங்கி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக கலந்துக் கொண்டார். அதில் அவர் வெளிப்படுத்திய வெகுளித்தனம் அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி ஆக்கியது. இன்று தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் சிவாங்கி.
சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார்.
இந்நிலையில், சிவாங்கிக்கு இரண்டு முக்கிய ஸ்டார்களிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்து வந்துள்ளது. அதில் ஒருவர், குக் வித் கோமாளி மூலம் சிவாங்கிக்கு கிடைத்த அண்ணன் புகழ், மற்றொருவர் குக் வித் கோமாளியில் சிவாங்கியின் க்ரஷ் ஆன அஸ்வின்.
புகழ் சிவாங்கி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "என் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், லவ் யூ தங்கமே, மிஸ் யூ பட்டுக்குட்டி, எப்பவும் சந்தோஷமா இருக்கணும், அண்ணன் எப்பவுமே உன் கூட இருப்பேன்", என்று கூறியுள்ளார்.
அஸ்வின் கூறிய வாழ்த்து செய்தியில், "மகிழ்ச்சியான பிறந்தநாள் கேடி ரவுடி, நீ ஒரு ஸ்மைல் மிஷின், அந்த சந்தோஷத்தை எல்லோருக்கும் கொண்டுவந்த உனக்கு நன்றி, இந்த வருடமும் உன்னுடைய எனர்ஜியும், பாஸிட்டிவிட்டியும் நிறைய பேருக்கு கிடைக்கட்டும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்", என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil