குக் வித் கோமாளி சிவாங்கி, தனது வீட்டில் ஊறுகாய் போட்ட வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
Advertisment
விஜய் டிவியின் முன்னனி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. ஒரு சமையல் நிகழ்ச்சியில் இடையூறு செய்வதற்காக கோமாளிகளை வைத்து செய்த நகைச்சுவைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு சீசன்கள் குறுகிய இடைவெளியில் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது சீசன் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் கோமாளியாக கலந்துக் கொண்டவர் சிவாங்கி. அவரது வெகுளித்தனமான பேச்சு மற்றும் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமானவர் சிவாங்கி. பெரிய பாடகர்கள் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் இவர் செய்த காமெடியான விஷயங்கள் சிவாங்கிக்கு குக் வித் கோமாளி வாய்ப்பை பெற்றுத்தந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் சிவாங்கி.
இதன் மூலம் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் அவ்வப்போது சுவாரசியமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் சிவாங்கி. இதில் சமீபத்தில் சிவாங்கி வெளியிட்ட வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
அந்த வீடியோவில் சிவாங்கி, கேரளாவில் தனது பெரியம்மா வீட்டிலுள்ள மரத்திலிருந்து மாங்காய்களைப் பறித்து கேரள ஸ்டைலில் ஊறுகாய் போடுகிறார். இந்த வீடியோதான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.