Cook with Comali Stars in IPL Ad gone Viral Photos Tamil News : அரை ஸ்பூன் சமையல் குறிப்போடு ஒரு ஸ்பூன் நகைச்சுவையை தாராளமாகக் கலந்து, வார வாரம் விருந்தளிக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்க, பிரபல குக்குகளோடு நகைச்சுவை மன்னர்களான கோமாளிகளுடன் இணைந்து கலக்கும் இந்த குக்கரி ஷோ, முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, தற்போது இரண்டாம் சீசனும் ஃபைனல் எபிசோடை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஏற்கெனவே இறுதி எபிசோட் ஷூட் நிறைவடைந்து, தமிழ் புத்தாண்டிற்கு ஒளிபரப்ப தயார் நிலையில் இருக்கிறது. முதலாம் சீசனைவிட இரண்டாவது சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஷோவை முடித்துவிடாதீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இறுதி எபிசோட் ஷூட் நிறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இரண்டாம் சீசன் ஆரம்பத்திலிருந்தே புகழ், ஷிவாங்கி, பாலா, அஸ்வின், மணிமேகலை, ஷகீலா, கனி, சுனிதா, பவித்ரா லட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்களின் அட்ராசிட்டிகளை ரசித்து சில்லறைகளைச் சிதறவிட்ட ரசிகர்கள், இறுதிக் கட்டம் நெருங்க நெருங்க எமோஷனலாகிவிட்டனர். மக்களோடு நேரடியாக உரையாடுவதற்கான வாய்ப்புகள் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக எளிது என்பதால், மக்களின் அன்பு போட்டியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. இறுதி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின்போது செட்டில் எடுத்த சில புகைப்படங்களைப் போட்டியாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்தப் புகைப்படங்களுக்குப் பல எமோஷனல் கமென்ட்ஸ் குவிந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட மக்களின் ஃபேவரைட் போட்டியாளர்களாகப் புகழ், அஸ்வின், மணிமேகலை ஆகியோர் இணைந்து நடிக்கப்போகும் ஐபிஎல் போட்டி பற்றிய விளம்பர பேச்சுகள்தான் தற்போதைய சமூக வலைத்தளங்களின் சென்சேஷனல் வைரல் ஹிட். ஐபிஎல் போட்டியை விடவும் இவர்களின் விளம்பரத்தைத்தான் மக்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று சொன்னாலும் அது மிகையாகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil