குக் வித் கோமாளி சுனிதாவின் லாக்டவுன் டான்ஸ்.. வைரலாகும் வீடியோ..

cook with comali sunitha: சுனிதா கடந்த மார்ச் மாதம் ‘Sunita Xpress’புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வீடியோ பதிவிட்டு வருகிறார்.

cook with comali sunitha

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரை உலகறிய செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல குக்களும் கோமாளிகளும் ஃபேமஸ் ஆனார்கள். புகழ், ஷிவாங்கி, அஸ்வின், பாலா உள்ளிட்ட பலர் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஷோ மூலம் அதிகம் பிரபலமானவர் சுனிதா . நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களை மகிழ்வித்தவர்.

தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் வேற லெவலில் இருக்கும். அவரை அதிகம் ரீச் ஆக்கியது புகழை திட்டும் வசனங்கள்தான். அதேபோல் அஸ்வினுக்காக ஷிவாங்கியுடன் போட்டி போட்டுக்கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் ரசிகர்களை கவரும் படி இருந்தது. சுனிதா பல ஆண்டுகளாக ஃபீல்டில் இருக்கிறார். நடன கலைஞரான அவர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். சுனிதா கடந்த மார்ச் மாதம் ‘Sunita Xpress’புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

அதில் ஷாப்பிங் வீடியோ, மேக் அப் வீடியோ, ஷூட்டிங் ஸ்பாட் ஃபன் வீடியோஸ் என பதிவிட்டு வந்தார். தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். நீல சேலையில் காஞ்சனா 2 பட பாடலான வாயா என் வீரா.. என்ற பாடலுக்கு நடனமாடுகிறார் .

இவரது வீடியோவை பார்த்து வைரலாக்கி வரும் ரசிகர்கள், சுனிதாவுக்கு பட வாய்ப்புகளும், சீரியலில் முக்கிய ரோல்களும் கிடைக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali sunitha dance video viral

Next Story
கியூட் லுக்கில் அசத்தும் பாவம் கணேசன் சீரியல் நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com