லவ் யூ மை சிங்கப் பெண்ணே..! அழுது தீர்த்த சுனிதா; ஆறுதல் பிரியங்கா

தொகுப்பாளினி பிரியங்கா தனது தோழி சுனிதாவை ஆறுதல்படுத்தும் விதமாக உன்னுடைய I won’t give up என்கிற மனப்பான்மை உன்னை வாழ்வில் எங்கோ அழைத்துச் செல்லும். லவ் யூ மை சிங்கப் பெண்ணே.. என் தங்கம்!” என்று தெரிவித்துள்ளார்.

vijay tv, cook with comali, sunitha shares her victory, விஜய் டிவி, குக் வித் கோமாளி, சுனிதா, பிரியங்கா, cooku with comali sunitha shares with tears and happy, priyangka appreciated, varuthappadatha vaalipar sangam

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சுனிதா பல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ் மக்கள் என்னை விரும்பத் தொடங்கிவிட்டனர் என்று கண்ணீர் வீட்டு உருக்கமாக அழுதார். தொகுப்பாளினி பிரியங்கா தனது தோழி சுனிதாவை ஆறுதல்படுத்தும் விதமாக உன்னுடைய I won’t give up என்கிற மனப்பான்மை உன்னை வாழ்வில் எங்கோ அழைத்துச் செல்லும். லவ் யூ மை சிங்கப் பெண்ணே.. என் தங்கம்!” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் 6வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவுக்கு முன்னோட்டமாக ஒளிபரப்பாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் குக்கு வித் கோமாள் நிகழ்ச்சி சார்பில், சுனிதா கலந்துகொண்டார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளின் பிரபலங்கள், தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய குக் வித் கோமாளியில் கலக்கி வரும் சுனிதா, தான் வட இந்தியாவில் இருந்துகூட வரவில்லை. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இருந்து வந்திருப்பதால் தமிழில் பேசுவது இன்னும் சிரமமாகவே இருக்கிறது. ஆனால், அதுதான் ஆரம்பத்தில் எனது பலவீனமாக இருந்தது. 10 ஆண்டுகளாக நானும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி முதல் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டேன். ஆனால், தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.

அதற்குப் பிறகு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதார்த்தமாகத்தான் போனேன். போகப் போக என்னை பற்றி மீம்ஸ் வர தொடங்கியது. இது 10 ஆண்டுகளாக வராத ஒரு விஷயம். இது எப்போ கிடைக்கும் எப்போ கிடைக்கும் என ஏங்கி இருக்கேன். இப்போ அது கிடைச்சிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு தமிழ் தெரியாது எனும் நெகட்டிவ்வான விஷயத்தை இந்த ஷோவில் பிளஸ்சாக மாற்றி காட்டினார்கள்.

ஆரம்பத்தில் நான் மிகவும் தாழ்வாக யோசித்தேன். ஆனால் இப்போது நான் தமிழ் மக்களின் மனதில் உட்கார ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் என்னை விரும்ப தொடங்கிவிட்டார்கள். எனக்கு நிம்மதியாக இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், சுனிதா, இதற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை விஜய் டிவி தொகுப்பாளினியும் சுனிதாவின் தோழியுமான பிரியங்கா, சுனிதாவின் இன்ஸ்டா பதிவை ஷேர் செய்து “மை அழகு. பெருமையா இருக்குடி. இன்னைக்கு நீ என்னவா இருக்கியோ அதுக்கு காரணம் உன் கடின உழைப்புதான். உன்னுடைய I won’t give up என்கிற மனப்பான்மை உன்னை வாழ்வில் எங்கோ அழைத்துச் செல்லும். லவ் யூ மை சிங்கப் பெண்ணே.. என் தங்கம்!” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வந்து முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கி வரும் சுனிதாவின் 10 ஆண்டு கால போராட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali sunitha shares her victory with tears and happy priyangka appreciated

Next Story
3 லட்சுமி… 2 ராதா… பிக் பாஸ் தமிழ் 5 உத்தேச பட்டியல் லீக்!vijay tv, bigg boss season 5, bigg boss guessing contestant list, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் 5 போட்டியாளர்கள் உத்தேச பட்டியல், ராதா, ராதா ரவி, லட்சுமி மேனன், லட்சுமி ராமகிருஷ்ணன், பவித்ரா லட்சுமி, கமல்ஹாசன், மன்சூர் அலிகான், radha, radha ravi, lakshmi menon, lakshmi ramakrishnan, pavithra lakshmi, mansoor alikhan, tamil tv news, bigg boss news, kamal haasan, bigg boss, bigg boss tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com