Advertisment

பிங்க் லவ்வர்.. மேக்அப் அட்ராசிட்டிஸ்.. சுனிதா HandBag ல் என்ன ஸ்பெஷல்?

Sunita Xpress என்ற யூடியூப் சேனலை கடந்த மார்ச் மாதம் தொடங்கிய சுனிதா அவ்வபோது தனது டான்ஸ் , மேக்க அப் ரொட்டின், ஃபன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
Jul 10, 2021 18:03 IST
sunitha

விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சுனிதா. நடன கலைஞரான இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் ரொம்பவே ரீச் ஆனது. Sunita Xpress என்ற யூடியூப் சேனலை கடந்த மார்ச் மாதம் தொடங்கிய சுனிதா அவ்வபோது தனது டான்ஸ் , மேக்க அப் ரொட்டின், ஃபன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த சேனலுக்கு இதுவரை நான்கரை லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். சுனிதா பதிவிடும் வீடியோக்கள் எல்லாமே ட்ரெண்டிங்தான். .

Advertisment
publive-image

தற்போது லேட்டஸ்டாக தனது Handbagல் என்ன இருக்கிறது என்பதை அவரே வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். சரி சுனிதா Handbagல் அப்படி என்னதான் இருக்கிறது?

பச்சைக்கிளிபோல் உடை அணிந்து வந்துருக்கேன் என அவர் தொடங்கும்போதே பின்னணி வாய்ஸ் "நீங்க bird ஆனே" என்ற வடிவேல் காமெடி ரசிக்க வைக்கிறது. முதலில் அவரது HandBagல் இருந்து எடுப்பது பழைய பர்ஸ். அதில் ஏகப்பட்ட வேர்ஸ்ட் பேப்பர்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்கூல் ஐடி, பான்கார்டு, யூஸ் பன்னாத பேனா, ஃபேமிலி ஃபோட்டோ போன்றவைற்றை காட்டுகிறார்.

publive-image

அடுத்ததாக சுனிதா ஒரு ஹாஜ்மோலா பிரியர் சின்ன வயசிலிருந்தே. என்ன டேஸ்ட்டாக இருக்குனு ரெண்டு வாயில் போட்டு தனது கேமராமேனுக்கும் கொடுத்து அட்ராசிட்டி செய்கிறார். அடுத்தது ஸ்மால் ஃபேன், ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே, குழந்தை பருவத்திலிருந்து வைத்துள்ள ஒரு பொம்மை என லிஸ்ட் நீள்கிறது. எல்லாமே பிங்க் கலர்தான். சரியான பிங்க் பைத்தியம் நான் அவரே கூறிக்கொள்கிறார். பிறகு கூலர்ஸ் , நெயில் பெயிண்ட் என நார்மலாக பெண்கள் வைத்திருக்கும் பொருட்களை தான் வைத்துள்ளார். வீடியோவில் அவ்வபோது வரும் வடிவேல், விவேக், சந்தானம் காமெடிகளின் பேக்கிரவுண்ட் வாய்ஸ் வேற லெவலில் உள்ளது. சுனிதாவின் ஸ்பெஷல் அவர் பேசும் அறைகுறை தமிழும், தன்னை தானே கலாய்த்துக்கொள்வதும்தான். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Sunitha #Cook With Comali Sunita #Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment