Cook with Comali Tamil News: குக்கிங் மற்றும் கமெடியில் கலக்கி வந்த குக்வித் கோமாளியின் சீசன் 2 கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் முடிந்தது. ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற இந்த ஷோவின் இறுதி போட்டி கடந்த தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற்றது. இதில் சிறந்த குக் என்ற டைட்டிலை கனி தட்டிச் சென்றார். மேலும் அவருக்கு ரூபாய் 5 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது.
தற்போது இதில் நடித்த அனைத்து பிரபலங்களும் திரைப்படங்களில் பிஸியாகியுள்ளனர். கோமாளியாக வந்து கமெடியில் அசத்திய புகழ் 5ற்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அஸ்வின் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். வெகுளி சிரிப்பில் ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தில் நடித்து வருகிறார். ஷோவில் நடித்த மற்றவர்களும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குக்வித் கோமாளி குழு மற்றோரு நிகழ்ச்சிகாக ரீயூனியன் ஆகியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சீரியல் நடிகை ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதோடு லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் ரசிகர் ஒருவர், 4 புகைப்படங்களுகும், 'டாப் நோட்ச்' என்றுள்ளார். மற்றோரு ரசிகர் 'அஸ்வின், ஷிவாங்கி எங்கப்பா' என்று கேட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)