/tamil-ie/media/media_files/uploads/2021/06/tamil-indian-express-2021-06-16T095301.821.jpg)
COOK WITH COMALI Kani Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி வலம் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 1 துவக்கத்தில் சுணக்கம் காட்டினாலும் சில வாரங்களிலேயே மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில மாதங்களிலேயே ஒளிபரப்பட்ட சீசன் 2க்கு அதன் முதல் எபிசோடு முதல் மக்களின் ஆதரவு கிடைத்தது. இதற்கு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை குறிப்பிட்டு கூறலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Screenshot-2021-06-10-at-11.12.52-AM-1.png)
இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் சில வாரங்களுக்கு முன்னர் தான் முடிந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியில் சமையல் செய்து அசத்திய கனி 2வது சீசனின் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Screenshot-2021-06-10-at-11.14.00-AM-1.png)
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக துவங்கிய போது, இவ்வளவு அழகாக சமைக்கும் இந்த கனி யார்? என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்தது. அவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்களில் ஒருவர் எனவும், தீரத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திருவின் மனைவி என்றும் பிறகு தான் தெரிய வந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Screenshot-2021-06-16-at-10.05.53-AM-1.png)
திரு - கனி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் இடம் பெற்ற புகைடபடத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கனி.
இந்த நிலையில், தனது பெரிய மகள் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கான கேப்ஷனில் "பொண்ண வளக்றதவிட கஷ்டம் அந்த பொண்ணு முடிய வளக்றது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கனி பகிர்ந்துள்ள இந்த விடியோவிற்கு அவரது ரசிகர்கள் உட்பட பலரும் கமெண்ட் செய்தும் அவரது மகளை வாழ்த்தியும் வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.