கணவரை பிரிந்து வெளிநாடு சென்றுள்ள சின்னத்திரை நடிகை விஜே மணிமேகலை தனது கணவரின் உருவத்தை மார்பளவு பொம்மை செய்து வைத்துள்ள நிலையில், அதை கணவருக்கே பரிசளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் விஜே மணிமேகலை, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். உசேன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
உசேன் மணிமேகலை இருவரும் சின்னத்திரையின் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் நிலையில், தற்போது கணவரை பிரிந்து அமெரிக்க சென்றுள்ள மணிமேகலை, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் எப்போதும் கணவருடனே செல்லும் மணிமேகலை இந்தமுறை கணவர் இல்லாமல் தனியாக சென்றுள்ளார்.
கணவர் உடன் இல்லாத குறையை போக்கும் வகையில் அமெரிக்காவின் சாலையோர கலைஞர் ஒருவரிடம் தனது கணவரின் புகைப்படத்தை கொடுத்து அவரின் உருவத்தை மார்பளவு பொம்மையாக செய்து வாங்கியுள்ளார் மணிமேகலை. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள அவர், அமெரிக்கா டூ ஆண்டிப்பட்டி உசேனின் சிரிப்பை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அதனால் அவனை எனக்கு நானே பரிசளித்துக்கொண்டேன். லாஸ் ஏஞ்சலில் உசேன் பொம்மை. வெளிநாடு சென்றாலும் உன்னை கூடவே வைத்து தொந்தரவு செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“