scorecardresearch

அட, பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி!

ரக்‌ஷனும் ஷிவாங்கியும் அண்ணன் தங்கைகளாக சேர்ந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், சோ…. சோ… க்யூட்டி அண்ணா தங்கம்” என்று மகிழ்ச்சியாக கொஞ்சி வருகின்றனர்.

cook with comali, VJ Rakshan, Shivangi, VJ Rakshan Shivangi photos goes viral, குக் வித் கோமாளி, ரக்‌ஷன், ஷிவாங்கி, ரக்‌ஷன் ஷிவாங்கி புகைப்படம் வைரல், அண்ணன் தங்கையாக ரச்ஷன் ஷிவாங்கி, Rakshan Shivangi take photo as brother and sister bonding, rakshan photos goes viral

விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் ஷிவாங்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு ஷிவாங்கி தங்கம்மா என்று கம்மெண்ட் செய்ய, நெட்டிசன்கள் அட பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன் – தங்கச்சி என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 5,6,7 நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் ரக்‌ஷன். இதனைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்ததன் சினிமாவிலும் கலம் இறங்கினார். கே.பி.ஒய் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, ரக்‌ஷனுக்கு டிவியில் ஒரு பெரிய பிரேக் கொடுத்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்‌ஷன்தான் தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம்தான் நிறைவடைந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கி, பாலா, ரக்‌ஷன் போன்றவர்கள் பெரிய அளவில் பிரபலமானார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அடுத்த சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷனும் அதில் கோமாளியாக பங்கேற்ற ஷிவாங்கியும் குக் வித் கோமாளி செட்டுக்கு சென்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழகாக ஒரு புகைப்படம் எடுத்து அதை ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு ஷிவானி தங்கம்மா என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

ரக்‌ஷனும் ஷிவாங்கியும் அண்ணன் தங்கைகளாக சேர்ந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், சோ…. சோ… க்யூட்டி அண்ணா தங்கம்” என்று மகிழ்ச்சியாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு இன்ஸ்டாகிரம் வாசி, “அழகா இருக்கீங்க அண்ணா தங்கச்சி” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

அண்ணன் தங்கைகளாக ரக்‌ஷன் – ஷிவாங்கி புகைப்படத்துக்கு நெட்டிசன்கள், “அட பாசமலர் தோத்துடும் போல… அழகான அண்ணன்- தங்கச்சி” என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர். ரக்‌ஷன் – ஷிவானி பாசமலர் அண்ணன் தங்கச்சி புகைப்படம் 3 லட்சத்துக்கு மேல் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali vj rakshan shivangi photos goes viral