Cooku with comali Kani Tamil News: விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. அதிலும் இதன் 2ம் சீசனின் டிஆர்பி ரேட்டிங் அப்போது ஒளிபரப்பாகிய பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவையே கிராஸ் செய்தது. மேலும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த இந்த நிகழ்ச்சியில், சமையல் செய்து அசத்திய கனி 2வது சீசனின் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளனர். அதோடு சமூக வலைதள பக்கங்களிலும் தங்களை ஆக்டிவாக வைத்துள்ளனர். அவர்களை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.அந்த வகையில் 2வது சீசனின் டைட்டில் வின்னர் கனியை பின் தொடருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர் அவ்வப்போது பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் அவர் தனது குழந்தைகளுடன் இருந்த புகடைப்படம் ஒன்று வைரலாகியது. இந்த நிலையில், தற்போது கனி அவரது அக்கா நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் தங்கை நிரஞ்சனியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அவரது தங்கை நிரஞ்சனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் கனி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“