குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது? பிரபலம் கொடுத்த புது தகவல்!

Cook With Comali season 3 starting date revealed Tamil News: குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், நிகழ்ச்சி நடுவர் செப் வெங்கடேஷ் பட் ஒரு புதிய தகவலை கொடுத்துள்ளார்.

Cooku with Comali latest update: chef venkatesh bhat reveals about cwc season 3 schedule

Cooku with Comali latest update: விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் ‘குக் வித் கோமாளி’ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளை குறிப்பிடலாம். கொடுக்கப்படும் டாஸ்க்குகளின் போது அவர்கள் செய்யும் சேட்டைகளும் காமெடிகளும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தாமல் இருந்தது. அதிலும் இந்த ஆண்டு ஒளிபரப்பாகிய சீசன் 2 முதல் சீசனை விட நன்றாகவே இருந்தது. தவிர, இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கையே ‘ஓவர் டேக்’ செய்திருந்தது.

தற்போது இந்த சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கோமாளிகள் என அனைவருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் புகழ் மற்றும் ஷிவாங்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாக உள்ளது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் 3 சீசன் குறித்து ஏதேனும் தகவலாவது வெளிவருமா? என எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்று வைக்கும் அளவிற்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவர் செப் வெங்கடேஷ் பட் ஒரு தகவல் கொடுத்துள்ளார். அது என்னவென்றால், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் குக் வித் கோமாளியின் 3ம் சீசன் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்றுள்ளார். இதே மாதங்களில் தான் பிக் பாஸ் சீசன் 5 துவங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cooku with comali latest update chef venkatesh bhat reveals about cwc season 3 schedule

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com