Cooku with Comali latest update in tamil: விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதில் பங்கு பெற்ற கோமாளிகள் தான். டாஸ்க்குகளின் போது அவர்கள் செய்யும் சேட்டைகளும் காமெடிகளும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தாமல் இருந்தது. அதிலும் இந்த ஆண்டு ஒளிபரப்பாகி சீசன் 2 அல்டிமெட்டாக இருந்தது. மேலும் விஜய் டிவியில் அப்போது ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கையே ‘ஓவர் டேக்’ செய்தது.

கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் சீசன் 2-க்கான ‘கிராண்ட் பைனல்’ கடந்த சில வாரங்களுக்கு முன்னரே நடந்து முடிந்தது. இந்த இறுதிச் சுற்றுக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா பாஸ்கர் ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு வந்திருந்தார்.
மிகவும் விறுவிறுப்புடன் நடந்த இந்த இறுதிச் சுற்றில் யாருக்கு வெற்றி என மக்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில், சீசன் முழுதும் சமையலில் அசத்திய கனி முதலிடத்தை பெற்றார். அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் 2ம் இடத்தையும் ஷகீலாவும், 3ம் இடத்தை அஷ்வினும் பிடித்தனர்.

இந்த நிலையில், மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நீடித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3-யை ஓரிரு மாதத்தில் துவங்கவுள்ளார்களாம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, குக் வித் கோமாளியின் நடுவர் தாமுவிடம் சீசன் – 3 எப்போது ஆரம்பிக்கப்படும் என்று கேட்க்கப்ட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இந்த சீஸன் முடிஞ்சது ரொம்ப கஷ்டமா இருக்கு. சீசன் 3 100% வர வாய்ப்பு இருக்கு. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல வரும். கோமாளிகள் இவங்களேதான். குக்ஸ் பெரும்பாலும் பிக்பாஸ், சீரியல் நட்சத்திரங்கள்னு வர வாய்ப்பு அதிகம் இருக்குது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“