scorecardresearch

பவித்ரா லட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த புகழ் : என்ன கிப்ட் கொடுத்தார் தெரியுமா?

Cooku with comali pavithra lakshmi and pugazh latest Tamil News: குக் வித் கோமாளி பவித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள புகழ், ‘நல்ல ப்ரெண்ட்டாக கடைசி வரை இருப்போம்’ என தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Cooku with comali pavithra lakshmi Tamil News: pugazh gives surprises to pavithra lakshmi on her birthday

Cooku with comali pavithra lakshmi Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி சீசன் 2-ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பவித்ரா லக்ஷ்மி. இவர் இதற்கு முன்னதாக சில டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். தற்போது சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ள இவர், ஹீரோயினாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று பவித்ரா லக்ஷ்மி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதற்கு பிரபலங்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவிற்கு மிக நெருக்கமான நண்பராக உள்ள குக் வித் கோமாளி புகழ் அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அது என்ன சர்ப்ரைஸ் என்றால், ‘கிப்ட் வாங்கி கொடுத்தால் அது சரியாக இருக்காது, நான் உடன் இருப்பது தான் பெரிய கிப்ட், எல்லா பிறந்தநாளுக்கும் நான் நண்பனாக உடன் இருப்பேன், அது தான் கிப்ட்’ என புகழ் தெரிவித்து உள்ளார்.

பவித்ரா வீட்டில் நடந்த இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் புகழ் மட்டுமின்றி சக்தி உள்ளிட்ட சில குக் வித் கோமாளி பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த கொண்டத்தின் போது அவர்கள் இன்ஸ்டா லைவில் வந்து தங்கள் ரசிகர்களை சந்தித்துள்ளனர். அதோடு இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பவித்ரா.

தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலமும் பவித்ராவுக்கு வாழ்த்து கூறியுள்ள புகழ், ‘நல்ல ப்ரெண்ட்டாக கடைசி வரை இருப்போம்’ என புகழ் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cooku with comali pavithra lakshmi tamil news pugazh gives surprises to pavithra lakshmi on her birthday