Cooku with comali pugazh Tamil News: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளன. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ இதுவரை அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக வலம் வருகிறது. தவிர, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே இது ஒரு புதிய திருப்பு முனையாக அமைந்தது.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால், நிகழ்சியில் கலந்து கொண்டோர் முதல் ரசித்தோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து காமெடி விருந்து கொடுத்த புகழுக்கு அவரது வாழ்க்கையில் புதிய உச்சமாக அமைந்தது. தற்போது சினிமாவில் பிஸியாக உள்ள புகழ் ஏகப்பட்ட படங்களை கை வசம் வைத்துள்ளார். மேலும் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தும் வருகிறார்.

புகழ் தமிழில் முன்னணி காமெடி ஹீரோவாக உள்ள நடிகர் சந்தானத்தின் ‘சபாபதி’ படத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அந்த படம் விரைவில் ஓடிடி- யில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ நடிகர் சந்தனத்தின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கான விருந்தாக வெளியிடப்பபட்டு இருந்தது. இந்த படத்தில் குக் வித் கோமளி புகழுக்கு ஒரு முக்கியமான ரோல் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர் சீனிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படம் அதன் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்க்கத் தயாராகிவிட்டதாகவும், அடுத்த மாதம் (ஜூலை 2021) சோனி லைவில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“