Advertisment

குக்கு வித் கோமாளி 5: முதல் முறையாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜன்... விளையாட்டைத் தொடங்கிய செஃப் தாமு... புரோமோ வைரல்

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் 5-வது லான்ச் புரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் இதுவரைக்கும் பேசாமல் இருந்த மாதம்பட்டி ரங்கராஜன் முதல் முறையாக பேசி இருக்கிறார். 

author-image
WebDesk
New Update
cooku with komali

மாதம்பட்டி ரங்கராஜன் - செஃப் தாமு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் 5-வது லான்ச் புரோமோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் இதுவரைக்கும் பேசாமல் இருந்த மாதம்பட்டி ரங்கராஜன் முதல் முறையாக பேசி இருக்கிறார். 

Advertisment

சமையலுடன் நகைச்சுவை இதுதான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் தீம். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இடையே கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, குக்கு வித் கோமாளி சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. குக்கு வித் மோமாளியில் பங்கேற்கும் கோமாளிகள் மாஸாக ஃபிளைட்டில் வந்து இறங்கி எண்ட்ரி கொடுக்கும் புரோமோ வெளியாகி இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. புரோமோவிலும் ஒரு நகைச்சுவை என்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து உச்சத்துக்கு கொன்டு சென்றுகொண்டிருக்கும் புகழ், ராமர் சைக்கிளில் வரும் காட்சி ரசிகர்கள் இடையே இப்போதே சிரிப்பலையை ஏற்படுத்தி விட்டது.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இதற்கு முன்பு, நடுவராக செஃப் தாமுவோடு, வெங்கடேஷ் பட் இணைந்து  பங்கேற்று வந்தார். ஆனால், இந்த சீசனில் செஃப் தாமு உடன் பிரபல சமையல் கலைஞர் செஃப் மாதம்பட்டி ரங்கராஜன் இணைந்துள்ளார். குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் 5-வது லான்ச் புரோமோவில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் ஃபிளைட்டில் பறந்தபடி பேசியுள்ளனர்.

அதில், செஃப் மாதம்பட்டி ரங்கராஜன், செஃப் தாமுவோடு இந்த சீசனில் ஜோடியாக சேர்ந்திருக்கிறேன். இந்த சீசன் களைக்கட்ட போகிறது.. அதுவும் விரைவிலே நீங்கள் எதிர்பார்த்த குக்கு வித் கோமாளி தொடங்கப் போகிறது என்று கூறியிருக்கிறார். அதே போல, செஃப் தாமுவும் பேசியிருக்கிறார். ஃபிளைட்டில் பறந்தபடி, செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் பேசிய குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் 5-வது லான்ச் புரோமோ வைரல் ஆகி வருகிறது.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில், குக்காக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் வசந்த், நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் வி.டி.வி கணேஷ், youtuber இர்பான் என்று பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சீசனில் குக்குகள் மட்டும் புதியவர்கள் அல்ல, கோமாளிகளிலும் புதியவர்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளடு. இந்த சீசனில் கோமாளியாக சீரியல் நடிகை ஷபி எண்ட்ரி ஆக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது லான்ச் புரோமோவில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் பேசியிருக்கிறார்கள். அதில் தாமு, பேசுகையில் எல்லாருக்கும் வணக்கம் நான் தாமு. என்னுடைய பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்த குக்கு வித் கோமாளி சீசன் 5 ஸ்டார்ட் ஆகிவிட்டது. இந்த குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் பார்த்தீங்கனா... எப்படி சாப்பாட்டில் எத்தனை ஸ்பெஷல் இருக்கிறதோ அதுபோல இந்த சீசனிலும் அதிகமான ஸ்பெஷல் இருக்கப் போகிறது. கண்டிப்பா நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுவீங்க. நீங்க ரொம்ப நாளா எப்ப வர போகுதுன்னு எதிர்பாத்து இருந்தீங்க. அதனால் விரைவில் இந்த சீசன் வரப்போகிறது. நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுங்க என்று கூறி இருக்கிறார். 

செஃப் தாமுவைத் தொடர்ந்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், ஹாய் எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் மாதம்பட்டி ரங்கராஜ். குக்கு வித் கோமாளி சீசன் 5 மாஸா, கிளாஸா வரப்போகுது. என்னோட பார்ட்னர் செஃப் தாமு சார். இந்த சீசனில் நாங்க இரண்டு பேரும் தான். நான் அவர் கூட ஜாயின் பண்ணி இருக்கிறேன். உங்க எல்லாரையும் டிஃபரண்டா ஒரு என்டர்டைன்மென்ட் மோடுக்குள் கொண்டு போகப் போகிறோம் என்று பேசியிருக்கிறார். 

இந்த புரோமோவில், மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது பக்கத்தில் இருந்த செஃப் தாமோ தன்னுடைய உடைகளை சரி செய்து கொண்டே இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தாமு சார் இப்போதே தன்னுடைய விளையாட்டை தொடங்கி விட்டார். இனி நிகழ்ச்சி தொடங்கியதும் அவரை கையில் பிடிக்க முடியாது என்று கம்மெண்ட் செய்து வருகிறார்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooku With Komali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment