New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/shivangi-3.jpg)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஷிவாங்கி இப்போது யூடியூபில் ஒரு பெரிய சாதனை செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் ஷிவாங்கிக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஷிவாங்கி இப்போது யூடியூபில் ஒரு பெரிய சாதனை செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் ஷிவாங்கிக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. நல்ல பாடகி என்று ரசிகர்களைக் கவர்ந்த அவர் தனது வெள்ளந்தியான பேச்சின் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். சூப்பர் சிங்க நிகழ்சியைத் தொடர்ந்து ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற ஷிவாங்கி, நகைச்சுவை கலைஞர் புகழுக்கு நிகராக தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொடந்து, ஷிவாங்கிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஷிவாங்கி பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் உடனடியாக அது சமூக ஊடகங்களில் வைரலாகி விடும். அதனால், ஷிவாங்கி ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். அதில் ஷிவாங்கி அவருடைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஷிவாங்கியின் வீடியோக்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருவதால் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது ஷிவாங்கியின் யூடியூப் சேனல் 10 லட்சம் சந்தாதாரர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் ஷிவாங்கி பெரிய சாதனை செய்துள்ளார். ஷிவாங்கியின் யூடியூப் சேனல் 10 லட்சம் சந்தாதாரர்களை கடந்ததால் அவருக்கு யூடியூபில் கோல்டு ப்ளே பட்டன் கிடைத்திருக்கிறது. அதை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: "Thankyou so much all! ❤️Received the Golden Play Button from @youtube!" என்று குறிப்பிட்டுள்ளார். ஷிவாங்கி 10 லட்சம் சந்தாதாரர்களைக் கடந்து கோல்டு பிளே பட்டன் பெற்று சாதனை படைத்திருப்பதற்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.