Cooku with comali Sivaangi Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பாப்புலராகி பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பாடகியாக தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலோனோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில், ஷிவாங்கியும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அவரின் யூடூப் சேனலில் அவ்வப்போது தோன்றும் இவர், பாடல் பாடிய வீடியோக்களையும், கொண்டாட்ட வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஊரடங்கிற்கு மத்தியில் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷிவாங்கி. இந்த வீடியோவில் ஷிவாங்கி அவரது அப்பா, அம்மா மற்றும் தம்பியுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்குகிறார். அப்போது சிறந்த பாடகி விருது பெற்ற ஷிவாங்கியின் ‘ஹாப்பி பர்த்டே’ வித்தியாசமான முறையில் பாடி அசத்தியுள்ளார். மேலும் கேரளாவின் பிரபல டிஷ்ஷானா ‘பழம்பொறி’ என்ற டிஷ்ஷை ஷிவாங்கியின் ரசிகர்களுக்காக அவரது அம்மா செய்து காட்டியுள்ளார்.
தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு அதிக பாரவையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ள இந்த வீடியோவை ஒரே நாளில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“