Cooku with comali Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்னர் மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தார். தொடர்ந்து விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய சீரியல்களிலும் நடித்து வந்தார்.

குக் வித் கோமாளி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இவர், தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாகவும் இருக்கிறார். இவர் அவ்வவ்போது பதிவிடும் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.

இந்தியாவில் தற்போது உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. இதனால் சினிமா ஷூட்டிங் முதல் சின்னத்திரை ஷூட்டிங் வரை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் தர்ஷா. முன்னதாக மீனவர்களுக்கு உணவு பொருட்களும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு சமைத்தும், அவரே நேரடியாக சென்று வழங்கியும் வந்தார்.
இந்த நிலையில், நீடித்து வரும் ஊரடங்கால் உணவுக்காக தவித்து வரும் திருநங்கைகளுக்கு உதவி செய்துள்ளார். இது குறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் “கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் திருநங்கைகள் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு, தாம்பரம் அருகில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினோம்” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“