/tamil-ie/media/media_files/uploads/2019/11/Cooku-with-Comali.jpg)
Cooku with Comali
Cook with Comali: ரசிகர்களுக்கு பிடித்த வகையில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது விஜய் தொலைக்காட்சி.
புதிய சீரியல்களையும், கேம் ஷோ-க்களையும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய விஜய் டிவி, தற்போது மற்றுமொரு நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தொடங்கவிருக்கிறது. ‘குக் வித் கோமாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குக்கரி ஷோ-வில், பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் டிவி-யின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக.
விரைவில் தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், நடிகை ரேகா பங்கு பெற்ற ப்ரோமோ முதலில் வெளியிடப்பட்டது. ”உன்னை வச்சிக்கிட்டு, எப்படித் தான் சமையல் கத்துத் தர்றதோ” என புலம்பியவாறு, ”இத கிள்ளிப் போடுன்னு” சொல்ல, அந்த நகைச்சுவை நடிகரோ, ரேகாவை கிள்ளி விடுகிறார். அடுத்த ப்ரோமோவில், நடிகை வனிதா விஜயக்குமார் இடம் பெற்றுள்ளார். உடனிருப்பவரிடம், பத்த வை என வனிதா சொல்ல, “உங்களைப் பற்றி அப்படி சொல்றாங்க, இப்படி சொல்றாங்க” என பற்ற வைக்கிறார்.
#CookWithComali! விரைவில்.. #VijayTelevisionpic.twitter.com/KvgjOH0Hjm
— Vijay Television (@vijaytelevision) November 3, 2019
இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், சமீபத்திய சென்சேஷனல் ரம்யா பாண்டியன் இடம் பெற்றிருக்கிறார். அவருக்கு உதவியாக நிற்கும், பிஜிலி ரமேஷ், எனி ஹெல்ப்? எனக் கேட்க, கரண்டி எடுத்து வரும்படி கேட்கிறார் ரம்யா. ஆனால் அவரோ எண்ணெய் வடியை எடுத்து வர, ”ஐய்யோ நான் என்ன கேட்டேன்” என கடுப்பாகிறார் ரம்யா.
#CookWithComali! விரைவில்.. #VijayTelevisionpic.twitter.com/D0RuBRQNIJ
— Vijay Television (@vijaytelevision) November 5, 2019
சமையல் என்பது ஒரு கலை, இப்படியான கோமாளித் தனங்களுக்கு இடையே இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்புப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.