‘ஷங்கர் சார் மன்னிச்சிடுங்க… அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி!’: திடீர் பல்டி அடித்த நடிகர்

விருமன் பட நடிகை அதிதியை காதலிப்பதாக கூல் சுரேஷ் கூறியிருந்த நிலையில், தற்போது அவரே மன்னிப்பு கேட்டிருக்கும் நிகழ்வு அரங்கேறி உள்ளது.

‘ஷங்கர் சார் மன்னிச்சிடுங்க… அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி!’: திடீர் பல்டி அடித்த நடிகர்

கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் விருமன். கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிராமத்து பின்னணியில் படம் உருவாகியிருக்கிறது. படம் வெளிவரும் முன்னரே பாடல்கள் ஹிட் ஆனாது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி அறிமுகமாகியிருக்கிறார். அதிதி இயக்குநர் சங்கரின் இரண்டாவது மகள் ஆவார். மருத்துவரான அதிதி நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்துள்ளார்.

இந்த படத்திற்கு பின் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் பாடலை அதிதி பாடியுள்ளார். இவரும், யுவனும் இந்த பாடல் பாடியுள்ளனர். இந்த பாடலும் ஹிட் ஆகியுள்ளது.

இதனிடையே சங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சில தினங்களுக்கு முன்பு கூல் சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், படத்தில் காதலை சேர்த்து வைப்பது போல் தன்னுடைய காதலையும் சேர்த்து வையுங்கள் என அதிதியை குறிப்பது போல் சங்கரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதற்காக கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார். அதோடு அதிதி தங்கச்சி மாதிரி என்றும் கூறியிருக்கிறார். இதை நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்அ னைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cool suresh who said he loves aditi shankar and wants to marry her apologizes