சயின்ஸ் ஃபிக்ஸனா, டைம் ட்ராவலா? கூலி படம் எந்த ஜானர்? லோகேஷ் கனகராஜ் சொன்ன ஆச்சரிய பதில்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கூலி படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அந்த திரைப்படம் எந்த ஜானர் என்று லோகேஷ் பதிலளித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கூலி படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அந்த திரைப்படம் எந்த ஜானர் என்று லோகேஷ் பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Coolie movie A certificate CBFC collection impacted Tamil News

ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், குறிப்பாக அதன் டிரெய்லர் வெளியான பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலி படத்தின் மூன்று நிமிட டிரெய்லர் ரசிகர்களை, குறிப்பாக ரஜினிகாந்த் வரும் தருணங்களில் அது டைம் ட்ராவல் அல்லது அறிவியல் சார்ந்த கதையாக இருக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். 

Advertisment

டிரெய்லரில் உள்ள ரகசிய காட்சிகள் மற்றும் நுட்பமான குறிப்புகள், லோகேஷ் கனகராஜ் இந்த முறை புதிதாக ஏதோ முயற்சி செய்துள்ளார் என்று நெட்டிசன்களை நம்ப வைத்துள்ளது.

கூலி வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில், லோகேஷ் நேர்காணலில் பதிலளித்தார். “நான் அந்த விஷயங்களை எல்லாம் படித்தேன், ஆனால் அது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் சிரிப்புடன் கூறினார். “இப்போதுதான் நான் சத்யராஜ் சாரிடம் இதைப் பற்றி பேசி கொண்டிருந்தேன், எல்லோரும் இது ஒரு அறிவியல் கதை என்று டைம் ட்ராவல் என்றும் கூறுகிறார்கள்... படம் எதைப் பற்றியது என்பதை உண்மையில் பார்க்கும்போது ஆச்சரியப்படப் போகும் மக்களைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார் லோகேஷ். 

லோகேஷ் டைம் ட்ராவல் என்பதை  உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்றாலும், அவரது கருத்துக்கள் நெருப்பில் எண்ணெய் ஊற்றி, ரசிகர்களுக்கு ஏற்கனவே இருந்ததை விட அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment
Advertisements

அதே நிகழ்வின் போது, 2022 ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து வெளியான விக்ரம் படத்தை இயக்கிய பிறகு ரஜினிகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றியும் திரைப்படத் தயாரிப்பாளர் மனம் திறந்து பேசினார். “எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டு பேரும் ஜாம்பவான்கள். இரண்டும் என் கண்கள் போன்றவை, அவற்றில் எது சிறந்தது அல்லது எவ்வளவு வித்தியாசமானது என்று என்னால் சொல்ல முடியாது,” என்று அவர் கூறினார். 

கூலியில் நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட  நடிகர்களும் நடித்துள்ளனர். அமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: