/indian-express-tamil/media/media_files/2025/08/14/8-weeks-coolie-2025-08-14-17-47-03.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கூலி' திரைப்படத்தில், ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், சவுபின், நாகார்ஜுனா, ஆமீர் கான், மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் 172வது திரைப்படமாகும் இந்த படம், கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
சென்னையில் ஒரு மேன்சனில் தங்கியிருந்து வாழ்க்கையை நடத்தி வருகிறார் ரஜினி. அந்த மேன்சனில் தங்கும் இளைஞர்களுக்கு அவர் சில நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கச் சொல்லுகிறார்.
அதாவது, மதுபானம் அருந்தக் கூடாது, புகைபிடிக்கக் கூடாது, மற்றும் இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது போன்ற ஒழுக்கமிக்க நெறிமுறைகள் அந்த இடத்தில் நடைமுறையில் உள்ளன.
அந்த "தேவா மேன்சன் " நடத்தும் ரஜினிக்கு அவருடைய நண்பர் சத்யராஜ் மாரடைப்பில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவரது இறப்பு இயற்கையானது அல்ல, யாரோ நெஞ்சில் ஓங்கி அடித்தது போல் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் நண்பனை கொலை செய்து , 3 பெண் குழந்தைகளையும் நிராதரவற்றவர்களாக மாற்றியது யார் என்பதையும் ரஜினி கண்டறிகிறார். இந்த படத்தில் ரஜினிக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் சூப்பராக அமைக்கப்பட்டுள்ளது.
அது போல் ரித்திக் ரோஷனின் வார் 2 என்ற இந்தி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. உளவு பணி சார்ந்த கதையை கொண்டது. இதில் ரித்திக் ரோஷன் ஒரு ரா ஏஜென்சியில் பணிபுரிபவராக நடித்துள்ளார். காளி எனும் சர்வதேச மாஃபியா கும்பல் உள்ளது.
இந்தியாவை பலவீனப்படுத்துவதும் பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதும்தான் இந்த காளி குழுவின் நோக்கம். இந்த குழுவில் ரித்திக்கும், ஜூனியர் என்டிஆரும் சேர்கிறார்கள். இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. காளி குழு தனது இலக்கை அடைந்ததா என்பதுதான் மீதி கதை.
கூலியும், வார் 2 படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை் எவ்வளவு பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் சாகினில்க் என்ற டிராக்கரின் டேட்டாவின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடியும் வார் 2 ரூ 51 கோடியும் வசூலித்தது.
இரு படங்களும் இணைந்து ரூ 100 கோடியை முதல் நாளில் வசூலித்தாலும் நாளுக்கு நாள் இரு படங்களுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
'கூலி' திரைப்படம் தனது இரண்டாவது நாளில் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது, அதே நேரத்தில் 'வார் 2' படம் ரூ.57 கோடி வசூலாகியுள்ளது.
மூன்றாவது நாளான நேற்று, 'கூலி' இந்திய அளவில் ரூ.38.5 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதே சமயம், 'வார் 2' திரைப்படம் ரூ.33 கோடி மட்டுமே வசூலித்தது.
இதனுடைய அடிப்படையில், முதல் 3 நாட்களுக்கான மொத்த வசூல் - 'வார் 2': ரூ.142 கோடி மற்றும் 'கூலி': ரூ.158.25 கோடி எனும் சாதனையை பெற்றுள்ளது.
நான்காவது நாள் ஆன ஞாயிற்றுக்கிழமையில், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு சென்றதால், 'கூலி' படம் ரூ.35.25 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதே நாளில் 'வார் 2' திரைப்படம் ரூ.31.3 கோடி வசூல் செய்துள்ளது.
அது போல் வார இறுதி முடிந்து திங்கள்கிழமை வந்ததும் தியேட்டர்கள் காலியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை கூலி படத்தை பார்க்க ஏராளமானோர் கூடினர் என்கிறார்கள்.
அது போல் இந்தியிலும் வார் 2 படத்திற்கு அமோக ஆதரவு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
5ஆவது நாள் வசூல் இரு படங்களுக்கும் குறைந்திருந்தாலும் திங்கள்கிழமையில் இது அதிகம்தான் என்கிறார்கள். அந்த வகையில் கூலி படம் ரூ 8.37 கோடியும் , வார் 2 படம் ரூ 6.66 கோடியும் வசூலானது.
அது போல் 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று கூலி படம் ரூ 9.50 கோடியும் வார் 2 படம் ரூ. 8.25 கோடியும் வசூலித்தது.
6 நாட்களில் கூலி படம் மொத்தம் ரூ 216 கோடியையும் வார் 2 படம் 190 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.