ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ரஜினிகாந்தின் மிகவும் பரபரப்பான படமான கூலிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஆன்லைன் பொழுதுபோக்கு டிக்கெட் தளமான புக் மை ஷோ (BMS) தொடங்கியுள்ளது. சுவாரஸ்யமாக, ரஜினியின் கோட்டையான சென்னை மற்றும் பெங்களூருக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது.
ஆனால் அதன் டிக்கெட் கட்டணம், அரசு நிர்ணயித்ததை விட பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பி.எம்.எஸ் தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட காட்சிகளுக்கான திரைப்பட டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை உள்ளது, பல ஒற்றைத் திரைகள் ஆஃப்லைன் முன்பதிவுகளையும் தொடங்கியுள்ளன.
இந்தப் படம் இதுவரை திருவனந்தபுரத்தில் 200க்கும் மேற்பட்ட காட்சிகளையும், கொச்சியில் 150 காட்சிகளையும், திருச்சூரில் 85க்கும் மேற்பட்ட காட்சிகளையும், கோழிக்கோட்டில் கிட்டத்தட்ட 30 காட்சிகளையும், குருவாயூரில் 11 காட்சிகளையும் கண்டுள்ளது.
ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள, 'கூலி' படம், ஆக.14ம் தேதி, தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும், 750 தியேட்டர்களுக்கு மேல், இப்படம் வெளியாகிறது.
அதேபோல், 37 ஆண்டுகளுக்கு பின், ரஜினி படத்திற்கு, 'ஏ' சான்று தரப்பட்டுள்ளது. இதனால், தியேட்டருக்கு சிறுவர், சிறுமியர் வருகையும், குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கையும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், தமிழகத்தில், 'கூலி' பட டிக்கெட் விலை, வழக்கமான கட்டணத்தை தாண்டி, பல மடங்கு உயர்த்தி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகமானதோடு, 'ஏ' சான்றுடன் வெளியாவதால், அதை ஈடுகட்ட, டிக்கெட் கட்டணத்தை அதிகரித்து விற்க வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், 'கூலி' படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கு, குறைந்தபட்ச டிக்கெட் விலையே, 500 ரூபாயாக உள்ளது. வழக்கமாக சாதாரண தியேட்டரில் 130 - 160 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற வேண்டும்.
அதேபோல், 'மல்டி பிளக்ஸ்' தியேட்டரில் கட்டணம் 190 ரூபாயாகவும் இருக்க வேண்டும் என்பது, அரசு வெளியிட்டுள்ள ஆணை.அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக, 190 ரூபாய் கட்டணம் என, 'ஆன்லைன்' முன்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் தமிழில் வெளியாகும் 'கூலி' படத்திற்கு அதிகபட்சம், 1000 ரூபாய் டிக்கெட் விலை என, ஆன்லைன் முன்பதிவிலேயே குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், 'கூலி' படத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது தவறு என்று பொதுமக்கள் கருது தெரிவித்துள்ளனர்.