Coolie Box Office Collection Day 7: கொட்டும் பண மழை... வரலாறு படைக்கும் கூலி வசூல்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் 7வது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் 7வது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-21 110856

ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து, அனிருத் இசையமைத்த 'கூலி' திரைப்படம், முதலில் 4 நாட்களில் நல்ல வரவேற்பு பெற்றாலும், அடுத்து வார நாட்களில் எதிர்பார்த்த அளவில் வசூல் செய்யாமல் சோர்ந்து இருக்கிறது.

Advertisment

'கூலி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளது. தாங்கள் செய்ய சொன்ன திருத்தங்களை ஏற்க மறுத்த நிலையில் தான் ஏ சான்றிதழ் வழங்கினோம் என தணிக்கை குழு பதில் அளித்துள்ளது.

வயலென்ஸ் தான் தனது அடையாளம் என்று நினைக்கும் லோகேஷ் கனகராஜ், கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்தாலும், சென்சாரின் விதிமுறைகளை ஏற்க மறுத்தார்.

படத்தின் வசூல் திடீரென குறைய ஆரம்பித்துள்ள நிலையில், அதிக வருவாய் நம்பிக்கையுடன் பல நூறு கோடி முதலீடு செய்த சன் பிக்சர்ஸ் தற்போது யு/ஏ சான்றிதழை பெற கடுமையாக போராடி வருகிறது.

Advertisment
Advertisements

இரண்டாவது வாரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் படத்தை பார்வையிட வரும்படி ஏற்பாடுகளையும் சன் பிக்சர்ஸ் செய்யும் முயற்சியில் உள்ளது.

இந்திய முழுவதும் 'கூலி' படம் தமிழில் மட்டுமே நல்ல வசூலை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் படம் வெளியாகியிருந்தாலும், அந்த மொழிகளில் பிரபலமான நடிகர்கள் நடித்திருக்கும் போதும், அந்த மொழிகளுக்கு வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளது.

நேற்று நாடு முழுவதும் சேர்த்து வெறும் 6.5 கோடி வசூல் செய்தது. இதுவரை இந்தியாவில் 'கூலி' திரைப்படம் மொத்தம் 222.5 கோடி வசூலை சம்பாதித்துள்ளதாக சாகினில்க் வெப்சைட் தகவல் வெளியிட்டுள்ளது.

'லியோ' திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் பெற்ற நிலையில், 'கூலி'i திரைப்படம் இதுவரை உலகளவில் 464.5 கோடி ரூபாய் வசூல் செய்து முன் நிற்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை விட வெளிநாட்டில் 'கூலி' படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வலுவான ரசிகர் ஆதரவை வெளிப்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.

'லியோ' படத்தின் வசூலை போலியாக காட்டுவதாகவும், அதைப் பயன்படுத்தி 'கூலி' படத்தின் வசூல் போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் உருவாக்கி, ‘ரெக்கார்ட் மேக்கர்’, ‘ரெக்கார்ட் பிரேக்கர்’ என அழைத்துச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இதேபோல், இந்த ஆண்டு வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் நாளே 186 கோடி வசூல் என்ற போலியான தகவல் மற்றும் அதற்கான போஸ்டரை வெளியிட்டு, பின்னர் தயாரிப்பாளர் அதனால் கஷ்டப்பட்ட நிலைமை தான் உண்மை என கூறியதும், பல பற்கள் மற்றும் போலி பாக்ஸ் ஆபீஸ் விளம்பரங்கள் பரவிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், 'கூலி' படத்தின் ஒரு வார வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: