/indian-express-tamil/media/media_files/2025/08/16/coolie-movie-actor-upendra-rao-wife-priyanka-acted-raja-ajith-movie-tamil-news-2025-08-16-16-31-01.jpg)
கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை பிரியங்கா, கடந்த 1997 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான ஜோதா படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
இந்திய சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வெளியான திரைப்படம் 'கூலி'. சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கான இசையை அனிருத் அமைத்து இருந்தார். இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.
கூலி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியாகி இரண்டு நாள்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ரூ. 118 கோடி வசூல் செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நட்சத்திர பட்டாளம் நிறைந்துள்ள கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் குறித்தும், படத்தில் அதிக கவனம் ஈர்த்தவர்கள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூலி படத்தில் கலீஷா கதாப்பாத்திரத்தில் கன்னட முன்னணி நடிகரும், இயக்குநருமான உபேந்திர ராவ் நடித்திருப்பார்.
57 வயதான இவர் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவராக அறியப்படுகிறார். அவர் இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார். 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அங்கோர் பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், தனது சிறப்பான நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக ஏரளமான விருதுகளை அவர் வென்றுள்ளார்.
இந்த நிலையில், கூலி படத்தில் நடித்திருக்கும் நடிகரும், இயக்குநருமான உபேந்திர ராவின் மனைவி தான் நடிகை பிரியங்கா உபேந்திரா. இருவரும் கடந்த 2003 ஆம் ஆண்டில் தான் திருமணம் செய்து கொண்டனர். கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை பிரியங்கா, கடந்த 1997 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான ஜோதா படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
இந்தி, ஓடியா, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர், தமிழில் விஜயகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து அவர் நடிகர் அஜித்துடன் 2002-ல் வெளிவந்த ராஜா படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகை ஜோதிகாவும் கதாநாயகியாக நடித்து இருந்தாலும், பிரியா கதாப்பாத்திரத்தில் வரும் நடிகை பிரியங்கா, அதிகம் கவனம் ஈர்த்து இருப்பார். குறிப்பாக, அஜித் அவரை தயிர் சாதம் என செல்லமாக கூப்பிடுவதால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை பிரியங்கா, 2002-ல் விக்ரமுடன் காதல் சடுகுடு படத்திலும், 2003-ல் ஐஸ் படத்திலும் நடித்தார். பின்னர் 2004-ல் வெளிவந்த ஜனம் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் மார்க்கெட்டை விட்ட அவர், மீண்டும் பெங்காலி, கன்னடம் படங்களில் கவனம் செலுத்தினார். அவர் கடைசியாக 2024-ல் வெளிவந்த கவுரி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமான இவர் தான் நடிகரும், இயக்குநருமான உபேந்திர ராவின் மனைவி என வியந்து பார்த்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.