/indian-express-tamil/media/media_files/2025/04/04/ynxlKfSFed0hwgysNsKT.jpg)
தமிழ் சினிமாவில் வெற்றி பட இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக 'கூலி' திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூலிபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த படமானது ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் சுமார் ரூ.120 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது கூலி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 14-ல் கூலி படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#COOLIE FROM 14 AUGUST 2025💥💥💥@rajinikanth sir @anirudhofficial bro @iamnagarjuna sir @nimmaupendra sir #SathyaRaj sir #SoubinShahir sir @shrutihaasan@hegdepooja@anbariv@girishganges@philoedit@Dir_Chandhru@PraveenRaja_Off@sunpictures#CoolieFromAug14pic.twitter.com/vqyLJFW7Il
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 4, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.