/indian-express-tamil/media/media_files/7lIxAHbxn6b9n4Yy3IPL.jpg)
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த பொன்விழா ஆண்டில், அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான 'கூலி', ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அவரது முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' வெளியாகி சரியாக 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளில், 'கூலி' வெளியாவது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ரஜினியின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்', சென்னையில் மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ணவேணி ஆகிய திரையரங்குகளில் வெளியானது. இந்த திரையரங்குகளில், கால மாற்றத்தால் மிட்லேண்ட், அகஸ்தியா மற்றும் ராக்ஸி ஆகியவை மூடப்பட்டுவிட்டன. ஆனால், சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கம் இன்றும் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கில் தான், அவரது 50வது ஆண்டு திரைப்படமான 'கூலி'யும் வெளியாகிறது.
இந்த அரிய நிகழ்வு, ஒரு நடிகரின் திரைப்பயணத்தின் நீட்சியையும், ஒரு திரையரங்கத்தின் வரலாற்றையும் இணைக்கிறது. இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றாலும், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் முதல் மற்றும் ஐம்பதாவது படங்களின் வெளியீட்டுடன் கிருஷ்ணவேணி திரையரங்கம் இணைந்திருப்பது, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு எதிர்பாராதநிகழ்வாகும்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணம், 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த பொன்விழா ஆண்டில், அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான 'கூலி', ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அவரது முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' வெளியாகி சரியாக 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளில், 'கூலி' வெளியாகிறது. இது ஒரு உணர்வுபூர்வமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தருணமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையைத் தவிர, இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க வெளியீடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய நிகழ்வுகள், ரசிகர்களுக்கு வெறும் சினிமா அனுபவத்தை தாண்டி, ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை நினைவுபடுத்துகின்றன.இதுபோன்றுவேறுஎதாவதுதியேட்டர்களும்இருக்கவாய்ப்புஉள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.