கூலி vs வார் 2 பாக்ஸ் ஆபிஸ்: வசூலில் தடுமாறும் 'வார் 2'; கெத்து காட்டும் கூலி: உள்நாட்டில் நம்பர் ஒன் யார்?

ரிலீஸ் ஆகி 4 நாட்கள் முடிவில், 'கூலி' திரைப்படம் சாதனைகளை முறியடிக்கும் வகையில் வசூலில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 'வார் 2' அஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வசூலில் சற்று தடுமாறி வருகிறது.

ரிலீஸ் ஆகி 4 நாட்கள் முடிவில், 'கூலி' திரைப்படம் சாதனைகளை முறியடிக்கும் வகையில் வசூலில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 'வார் 2' அஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வசூலில் சற்று தடுமாறி வருகிறது.

author-image
WebDesk
New Update
Cooml

2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் வெளியான நிலையில், இரு படங்களின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' மற்றும் அயன் முகர்ஜி இயக்கிய 'வார் 2' திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் களத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த இரு படங்களும் வெளியாகி 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இரு படங்களின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில், 'கூலி' திரைப்படம் ஒரு பெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் கூலி vs வார் 2 பாக்ஸ் ஆபிஸ்

'கூலி' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலை ஈட்டி வருகிறது. முதல் நாளில் ரூ65 கோடி நிகர வசூலுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய இப்படம், வெள்ளிக்கிழமை ரூ54.75 கோடி, சனிக்கிழமை ரூ39.5 கோடி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரூ35.25 கோடி என வசூலித்தது. திங்கட்கிழமை ரூ12 கோடி ஈட்டியதன் மூலம், 'கூலி' திரைப்படம் இந்தியாவில் ரூ200 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

இதற்கு மாறாக, 'வார் 2' திரைப்படம் 'கூலி'யின் வசூலை எட்ட முடியாமல் பின்தங்கியுள்ளது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படம், வியாழக்கிழமை ரூ52 கோடி, வெள்ளிக்கிழமை ரூ57.35 கோடி, சனிக்கிழமை ₹ரூ33.25 கோடி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரூ32.15 கோடி என வசூலித்தது. திங்கட்கிழமை ரூ8.75 கோடி ஈட்டிய நிலையில், அதன் மொத்த உள்நாட்டு வசூல் ₹183.5 கோடியாக உள்ளது.

உலக அளவில் கூலி vs வார் 2 பாக்ஸ் ஆபிஸ்

Advertisment
Advertisements

'கூலி' திரைப்படத்தின் உலகளாவிய வசூல், குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில், மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. தயாரிப்பாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, ரஜினிகாந்த் நடித்த கூலி படம் உலக அளவில் ரூ404 கோடியை ஈட்டியுள்ளது. அதே சமயம் ஆரம்பத் தொய்விலிருந்து மெதுவாக மீண்டு வரும் வார் 2 திரைப்படம், யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, உலகளாவிய வசூல் தற்போது ரூ300.50 கோடியாக உள்ளது.

பட்ஜெட் மற்றும் திரையரங்குகள்

'வார் 2' திரைப்படம் ரூ400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிக பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்றாகும். அயன் முகர்ஜி இயக்கிய இந்த உலகளாவிய ஸ்பை திரைப்படம், பல நாடுகளில் படமாக்கப்பட்டதுடன், அதிகப்படியான சி.ஜி.ஐ மற்றும் விஷுவல் எஃபெக்ட்களைக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் நாடு முழுவதும் 5,000 திரையரங்குகளில் வெளியானது.

'கூலி' திரைப்படம் இந்தியாவில் 1,980 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. ரூ350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ரஜினிகாந்தின் 'கூலி', இப்போதே பட்ஜெட்டை எட்டும் நிலைக்கு நெருங்கி வருகிறது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: