தமிழ் திரையுலகில் ‘என்ன படம் டா’, ‘செம்ம படம்’ என்று விரும்பிப் பார்த்தது உண்டு. சில படங்களை திரும்பத் திரும்ப பார்த்ததும் உண்டு. ஆனால் எத்தனைப் பேருக்கு தெரியும் இதெல்லாம் சுடாத பழம் இல்ல சுட்ட பழம் என்று?
ஈ அடிச்சான் காப்பிகளின் பட்டியலை பார்ப்போம் வாங்க
கோ - ஸ்டேட் ஆப் பிளே (ko - state of play)
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மெகா ஹிட் ஆன படத்தை எங்க இருந்து சுட்டாரு தெரியுமா? ஸ்டேட் ஆப் பிளே என்ற ஆங்கிலப்படத்தில் இருந்து.
தெகிடி - கரான்சோ (thegidi - carancho)
தெகிடி படத்தை பார்த்து ஜனனி ஐயர் சூப்பர் அழகு-னு பேசிட்டு இருந்த நாம படம் எப்படி நல்லா இருந்துச்சுனு யோசிச்சோமா?
ஜிகர்தண்டா - எ டர்ட்டி கார்னிவல் (jigarthanda - a dirty carnival)
ஒரு ரவுடி வாழ்க்கைய இப்படியெல்லாம் காமெடியா எடுக்க முடியுமா? எடுத்துட்டாரே இங்கிலிஷ் இயக்குநர் அதையும் எடுத்துட்டாரே.
கலகலப்பு - ஸோல் கிச்சென் (kalakalappu - soul kitchen)
கலகலப்பு படம் பார்த்த பிறகு யாரெல்லாம் பழைய காலத்து உணவு சாப்பிட துவங்குனீங்க? ஆனால் நம்ம டைரக்டர் பழைய படத்தைக் கொஞ்சமா சூடு செஞ்சு நமக்கே பரிமாறி இருக்காரு.
தாண்டவம் - சடோய்ச்சி (thaandavam - zatoichi)
விக்ரம் அனுஷ்கா ஜோடி, சிறப்பான பாடல்கள். நடிப்புலிம் பாட்டிலும் நம்மூர் ஆளுங்க அசத்திட்டாங்க. அட கதைலயும்..... இல்ல... கதை நம்மளோடது இல்ல.
கஜினி - மெமண்டோ (gajini - memento)
சூர்யாவுக்கு 15 நிமிஷத்துல மறந்து போச்சோ இல்லையோ மெமண்டோ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முருகதாஸுக்கு மறக்கல.
அன்பே ஷிவம் - பிளேன்ஸ், டிரெய்ன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் (anbe shivam - planes, trains and automobiles)
உலக நாயகன் படத்துலயே பெஸ்ட் என்று சொல்லும் ரசிகர்களுக்கு ஒரு தகவல்... கமலுக்கு முன்பே வெள்ளைக்காரன் சொல்லியாச்சு.
சாட்டை - டு சர். வித் லவ் (saattai - to sir. with love)
சமுத்திரகனி நடித்த சாட்டை படம் வெளியான பிறகு “இப்படி ஒரு டீச்சர் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்”-னு ஏங்கிய குழந்தைகள் உண்டு. ஆனால் இவருக்கு முன்பே பசங்க மனதில் ஒருதர் இடம் பிடிச்சிட்டாரு.
நான் ஈ - காக்ரோச் (naan e - cockroach)
அட பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்ல. இந்தியாவில் ஈ வெளிநாட்டில் கரப்பான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.