பிற மொழிகளில் இருந்து சுட்டப்படம்... பார்த்து தெரிஞ்சுகோங்க

தமிழ் திரையுலகில் ‘என்ன படம் டா’, ‘செம்ம படம்’ என்று விரும்பிப் பார்த்தது உண்டு. சில படங்களை திரும்பத் திரும்ப பார்த்ததும் உண்டு. ஆனால் எத்தனைப் பேருக்கு தெரியும் இதெல்லாம் சுடாத பழம் இல்ல சுட்ட பழம் என்று?

ஈ அடிச்சான் காப்பிகளின் பட்டியலை பார்ப்போம் வாங்க

கோ – ஸ்டேட் ஆப் பிளே (ko – state of play)

KO - STATE OF PLAY 1-horz

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மெகா ஹிட் ஆன படத்தை எங்க இருந்து சுட்டாரு தெரியுமா? ஸ்டேட் ஆப் பிளே என்ற ஆங்கிலப்படத்தில் இருந்து.

தெகிடி – கரான்சோ (thegidi – carancho)

thegidi

தெகிடி படத்தை பார்த்து ஜனனி ஐயர் சூப்பர் அழகு-னு பேசிட்டு இருந்த நாம படம் எப்படி நல்லா இருந்துச்சுனு யோசிச்சோமா?

ஜிகர்தண்டா – எ டர்ட்டி கார்னிவல் (jigarthanda – a dirty carnival)

jigarthanda- copy 1-horz

ஒரு ரவுடி வாழ்க்கைய இப்படியெல்லாம் காமெடியா எடுக்க முடியுமா? எடுத்துட்டாரே இங்கிலிஷ் இயக்குநர் அதையும் எடுத்துட்டாரே.

கலகலப்பு – ஸோல் கிச்சென் (kalakalappu – soul kitchen)

Kalakalappu copy

கலகலப்பு படம் பார்த்த பிறகு யாரெல்லாம் பழைய காலத்து உணவு சாப்பிட துவங்குனீங்க? ஆனால் நம்ம டைரக்டர் பழைய படத்தைக் கொஞ்சமா சூடு செஞ்சு நமக்கே பரிமாறி இருக்காரு.

தாண்டவம் – சடோய்ச்சி (thaandavam – zatoichi)

Thandavam copy

விக்ரம் அனுஷ்கா ஜோடி, சிறப்பான பாடல்கள். நடிப்புலிம் பாட்டிலும் நம்மூர் ஆளுங்க அசத்திட்டாங்க. அட கதைலயும்….. இல்ல… கதை நம்மளோடது இல்ல.

கஜினி – மெமண்டோ (gajini – memento)

Gajini copy

சூர்யாவுக்கு 15 நிமிஷத்துல மறந்து போச்சோ இல்லையோ மெமண்டோ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முருகதாஸுக்கு மறக்கல.

அன்பே ஷிவம் – பிளேன்ஸ், டிரெய்ன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் (anbe shivam – planes, trains and automobiles)

anbe shivam copy

உலக நாயகன் படத்துலயே பெஸ்ட் என்று சொல்லும் ரசிகர்களுக்கு ஒரு தகவல்… கமலுக்கு முன்பே வெள்ளைக்காரன் சொல்லியாச்சு.

சாட்டை – டு சர். வித் லவ் (saattai – to sir. with love)

sattai

சமுத்திரகனி நடித்த சாட்டை படம் வெளியான பிறகு “இப்படி ஒரு டீச்சர் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்”-னு ஏங்கிய குழந்தைகள் உண்டு. ஆனால் இவருக்கு முன்பே பசங்க மனதில் ஒருதர் இடம் பிடிச்சிட்டாரு.

நான் ஈ – காக்ரோச் (naan e – cockroach)

அட பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்ல. இந்தியாவில் ஈ வெளிநாட்டில் கரப்பான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close