உங்களுடைய பேச்சும், எழுத்தும் இன்னும் எளிமையாக இருந்திருக்கலாமே என்று விஜய் சேதுபதி எழுப்பிய கேள்விக்கு, நான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
நடிகர் கமல்ஹாசனின் பேச்சோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துக்களோ பலருக்கும் புரியவில்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது. மே 1அன்று ஊரடங்கு தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட் பலருக்கும் புரியவில்லை என்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் பேசினார் கமல். இவரை நடிகர் விஜய் சேதுபதி கேள்வி கேட்டார். பல கேள்விகளுக்கு தனது பாணியில் விளக்கம் கொடுத்தார். அதில் ஒரு கேள்வியாக விஜய் சேதுபதி, உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கலாமே, இதை வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன் என்றார்.
அதற்கு கமல், ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்ற பலரும் புரியணும் புரியணும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள். பாரதியாரிடம் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கு அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம். நான் இப்படித்தான். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil