Coronavirus outbreak Actor Prithviraj stranded in Jordan ; wife shares emotional notes : மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் பிரித்வி ராஜ். தற்போது ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம் என்ற பாலைவனப்பகுதியில் இந்த படத்திற்கான படபிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டது. அதே போன்று ஜோர்டான் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பிற்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. ஆனால் 27ம் தேதி மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
பாலைவனத்தில் இருந்து எங்கும் வெளியேற முடியாத நிலை உருவாகி உள்ளது. அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் இதர பொருட்களின் சப்ளையில் எந்த குறையும் இல்லை. ஆனால் இந்த தடை உத்தரவு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. எங்கள் குழுவில் மருத்துவர் ஒருவர் உள்ளார். எங்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் எங்கள் 58 நபர்களையும் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு முக்கியம் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அரசுக்கும், நண்பர்களுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பதை அப்டேட் செய்வது எங்களின் கடமை என்று நினைக்கின்றேன். ஆயிர கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களின் வீடு திரும்ப காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் விரைவில் வரும் என்று நம்புகின்றேன் என்று உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி சமூக வலைதளத்தில் அப்டேட் செய்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரித்விராஜின் மனைவி சுப்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இறப்புகளும், நோயின் தாக்கமும் நீடித்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் வீட்டின் வெளியே இரட்டை வானவில்லை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இது நல்ல நாட்களை தரும் என்ற நம்பிக்கையை எனக்கு தருகிறது. மேலே இருந்து எனக்கு தரப்படும் நற்செய்தியின் அறிகுறியா?” என்று கேள்வி எழுப்பி அருகில் ”பிரித்விக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
பிரித்வி தன்னுடைய குழுவினருடன் நலமாக வீடு திரும்புவார் என்று மலையாள திரையுலகமே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil