கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தள்ளிவைக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் ரிலீஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திவருவதன் எதிரொலியாக, ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

By: Updated: March 5, 2020, 12:20:09 PM

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திவருவதன் எதிரொலியாக, ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிரடி ஆக்‌ஷன் விருவிருப்புக்கு பஞ்சம் இல்லாத ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்கும் நடிகருக்கு அதே அளவுக்கு உலக அளவில் மாஸ் ரசிகர் கூட்டமும் உள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு வெளியாகிறது. ஆக்‌ஷன் பிரம்மாண்டம் என ஜேம்ஸ் பாண்ட் நிகழ்த்தும் சாகசங்களைப் பார்க்க ஆர்வத்துடன் தயாராகிவிடுவார்கள். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படமாக நடிகர் டேனியல் கிராக் நடித்துள்ள ‘நோ டைம் டூ டை’ என்ற படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை ஹாலிவுட் இயக்குனர் கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார்.


மின்னல் வேக கார் ரேசிங், ஜேம்ஸ் பாண்ட் அதிரடி ஆக்‌ஷன் சாகசம் நிறைந்த நோ டைம் டூ டை படத்தின் டீஸர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆபத்தான புதிய வைரஸ் பாதிக்கப்பட்டவர் பிற மனிதர்களை தொடர்புகொள்வதன் மூலம் வேகமாக பரவுவதால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரோலியால் சீனா, இரான் போன்ற நாடுகளில் பொது இடங்களில் மனிதர்கள் கூடுவது குறைந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் தங்கள் நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிப்புகளை அண்மையில் அறிவித்துள்ளன. அந்நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


ஜேம்ஸ் பாண்ட் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘நோ டைம் டூ டை’ படம் லண்டனில் நவம்பர் 12-ம் தேதியும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் நவம்பர் 25-ம் தேதியும் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி, ஆக்‌ஷன், பிரம்மாண்டம் என மிரட்டி ரசிகர்களைக் கவரந்த ஜேம்ஸ்பாண்ட் ரிலீஸ் கொரொனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus outbreak james bond movie no time to die release postponed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X