scorecardresearch

நான்கு மாடி கட்டிடத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுத்த ஷாருக் கான்

ரெட் சில்லி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் மூலமும் பல்வேறு உதவிகளை செய்ய அவரும் அவருடைய மனைவியும் முடிவு செய்துள்ளனர். 

Coronavirus Shah Rukh Khan Gauri Khan offered their 4-storey personnel office to BMC
Coronavirus Shah Rukh Khan Gauri Khan offered their 4-storey personnel office to BMC

Coronavirus Shah Rukh Khan Gauri Khan offered their 4-storey personnel office to BMC : நாளுக்கு நாள் கொரானா நோய் இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களால் இயன்ற அளவு உதவியை மத்திய அரசுக்கு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : வேலையில்லாமல் பெஃப்சி தொழிலாளர்கள் : ரூ 20 லட்சம் உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா

இந்நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக் கான் மற்றும் அவருடைய மனைவி கௌரி கான் தங்களுடைய 4 மாடி அலுவலக பகுதியை நோய் தடுப்பு பயன்படுத்திக் கொள்ளுமாறு மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வழங்கியுள்ளனர்.

அந்த கட்டிடத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தனிமைப்படுத்த மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர மருத்துவ வசதிகளும் அங்கேயே உள்ளன. இவர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து பிஎம்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்து உள்ளது.

தனிப்பட்ட காண்ட்ரிப்யூசன் மட்டும் இல்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரெட் சில்லி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் மூலமும் பல்வேறு உதவிகளை செய்ய அவரும் அவருடைய மனைவியும் முடிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus shah rukh khan gauri khan offered their 4 storey personnel office to bmc

Best of Express