ஆர்யாவை ரவுண்டு கட்டும் சோதனை... பிடிவாரண்ட் அளித்தது நீதிமன்றம்!

சமீபக் காலங்களாகவே நடிகர் ஆர்யா பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தற்போது புதிதாக ஒரு சிக்கல் அவருக்கு நேர்ந்துள்ளது.

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அவன் இவன்’. ஆர்யா, விஷால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை தவறாக சித்தரித்ததாக படம் வெளியானபோது பெரும் சர்ச்சைகள் கிளம்பியது.

இதனைத்தொடர்ந்து, சிங்கம்பட்டி ஜமீனை மோசமாக சித்தரித்ததற்காக நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டும் அவர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில், நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு எதிராக அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதே படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை மோசமாக சித்தரித்தாக, படக்குழுவினர் நீதிமன்ற வழக்கை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close