கதாநாயகனாக அறிமுகமாகும் முத்தரசன்: ‘அரிசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'அரிசி' படத்தின் ஃபர்ஷ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'அரிசி' படத்தின் ஃபர்ஷ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

author-image
WebDesk
New Update
CPI Muththarasan debut as hero Arisi Movie first look poster released Tamil News

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் ‘அரிசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Muththarasan: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன். இவர் தற்போது அக்கட்சியின் மாநிலச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முத்தரசன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'அரிசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment

'அரிசி' படத்திற்கு இசைஞனி இளையராஜா இசையமைக்கிறார். படத்தை மோனிகா புரொடக்‌ஷன் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார். எஸ்.ஏ.விஜய்குமார் இயகுக்கிறார். 

இரா.முத்தரசன் மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். விவசாயத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படம் உணவின் முக்கியத்தை வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், 'அரிசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரை பொறுத்தவரை கருமேகம் மற்றும் வயல் வெளியில் சட்டையில்லாமல் பனியனும் தோளில் துண்டும் போட்டுக்கொண்டு முத்தரசன் நின்றுகொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Muththarasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: